சற்று முன்
Home / செய்திகள் / வடக்கிலும் கொரோனா தாண்டவம் – இன்று 82 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

வடக்கிலும் கொரோனா தாண்டவம் – இன்று 82 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த இரவு மற்றும் இன்று பகல், யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகளின் அடிப்படையில் 82 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (11) இரவு பரிசோதனை முடிவுகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவின் விபரம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர் (வெளிநோயாளர் பிரிவில் ஒருவர், தனிமைப்படுத்தல் விடுதியில் 04 பேர்)
தெல்லிப்பளை வைத்தியசாலையில் 03 பேர்,
பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவின் மல்லாவி வைத்தியசாலையில் ஒருவர்,

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் (தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்) ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய முடிவுகள்

யாழ்.பல்கலைக்கழகம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் 71 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 341 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 31 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 428 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 40 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்
சாவகச்சேரி வைத்தியசாலையில் 03 பேர்
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்
கோப்பாய் வைத்தியசாலையில் ஒருவர்
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்
சண்டிலிப்பாய் சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 08 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 07 பேர்
அச்சுவேலி வைத்தியசாலையில் ஒருவர்
யாழ்.சிறைச்சாலையில் 07 பேர்

முல்லைத்தீவு
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 05 பேர்
முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவர்

கிளிநொச்சி
கிளிநொச்சி வைத்தியசாலையில் 02 பேர்
தர்மபுரம் வைத்தியசாலையில் ஒருவர்

வவுனியா
வவுனியா வைத்தியசாலையில் 04 பேர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வெங்காயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிடுவதால் என்ன நன்மைகள்…?

வெங்காயத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com