சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 3)

முக்கிய செய்திகள்

சனிக்கிழமை இரவு கொழும்பு – யாழ்ப்பாணம் – புங்குடுதீவு வரை பயணித்தோர் தொடர்புகொள்ளவும்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். அதனால் அந்தப் பெண் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு ...

Read More »

யாழ்.பல்கலை மாணவர்கள் 09 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு கோரோனா தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ...

Read More »

மணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் எற்பட்டில் சட்டத்தரணிகள் சந்திப்பு நேற்று (12) நடைபெற்றது. யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் நேற்றிரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் மணிவண்ணனுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிப்பதற்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு என்று ...

Read More »

செம்மணியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – நல்லூர் பிரதேச சபைக்கு சட்ட உதவி வழங்கத் தயார் என்கிறார் சட்டத்தரணி மணிவண்ணன்

மருத்துவக்கழிவுகளை கிடங்கு வெட்டி புதைப்பதற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடர தீர்மானித்தால் சட்ட உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என தமிழ் தேசிய மக்கள் மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். செம்மணி சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் , ...

Read More »

யாழ். நகரில் வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம் – மோ.சைக்கிள்களுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் மாநகரில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீயிட்டு எரியூட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. சுண்டுக்குளி குருசர் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த அட்டூழியம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு வீட்டின் வாயில் கதவு வாள்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் யன்னல் கண்ணாடிகளும் ...

Read More »

காணாமல் போயிருந்த ஜோடி பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்பு

காணாமற்போயிருந்த காதல் ஜோடி 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி குமரபுரத்தைச் சேர்ந்த இளைஞனும் திருநகரைச் சேர்ந்த இளம் பெண்ணுமே கடந்த 3ஆம் ...

Read More »

தியாக திபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூர் வரை நடைபயணம்

தியாக திபம் திலீபனின் 33 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபி வரை நடைபயணம் ஒன்று இடம்பெற இருக்கின்றது.குறித்த நடைபயனம் தமிழர் தாயக பொது அமைப்புகள், மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற இருக்கின்றது.எதிர்வரும் 21 ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் ...

Read More »

மணியுடன் எந்தவித தொடர்புகளையும் பேணவேண்டாம் – மணியை தேசிய அமைப்பாளர், ஊடக பேச்சாளர் எழுத வேண்டாம்

மணிவணனுடன் எந்தவித தொடர்புகளையும் பேணவேண்டாம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் , ஊடக பேச்சாளர் என சட்டத்தரணி வி.மணிவண்ணனை விளித்து செய்திகளை பிரசுரிக்காதீர்கள் என்றும் ஊடகவியலாளர்களிடம் வினயமாக கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் உள்ள காங்கிரஸ் ...

Read More »

முன்னணி உறுப்பினர்களுக்கு மூளைச்சலவை – வீடு வீடாய் ஏறி இறங்கும் கங்கிரஸ் கஜாக்கள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அணியில் இருப்பதனால் அவர்களை தமது பக்கம் கொண்டுவரும் முயற்சியில் கங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் இருவரும் ஈடுபட்டுள்ளனர். அரியாலையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு இன்று மாலை சென்ற கங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட மகனின் தாய் யாழில் நடைபெற்ற பேரணியில் தற்கொலை முயற்சி

யாழில் நீண்ட இடைவெளியின் பின்னராக கட்சி பேதங்களை கடந்து யாழில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது கவனயீர்ப்பு போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே போராட்டம் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் புறப்பட்டு மாவட்ட செயலகத்தை சென்றடைந்திருந்த நிலையில் தாய் ஒருவர் பகிரங்க வெளியில் துணித் துண்டு ஒன்றை கழுத்திலிட்டு தற்கொலைக்கு முயன்றமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com