பேராதனைப் பல்கலைக்கழக அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பாஸ்கரன் உரிமை மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணல்அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பாஸ்கரன் வழங்கிய நேர்காணல்
பாலஸ்தீன நாடொன்றிற்கான உரிமையை அங்கீகரிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐ.நாவில் உரையாற்றியிருக்கிறார். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
பாலஸ்தீன மக்களுடைய உரிமை என்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை. ஏற்கனவே ஐ.நா பொதுச்சபையில் பாலஸ்தீன மக்களை பெருமளவான நாடுகள் அங்கீகரித்து இருந்தன. இந்த அடிப்படையிலே அந்த உரிமையை ஜனாதிபதி அங்கீகரித்து இருப்பது முக்கியமாக ஐ.நா மாநாட்டு சபையிலே அதை அவர் வெளிப்படையாக சொல்லியிருப்பது வரவேற்க்கக் கூடிய விஷயம். ஏனென்றால். பாலஸ்தீன நாட்டினுடைய உரிமை அங்கீகரிப்பது என்பது புவிசார் அரசியல் ரீதியாக இலங்கை அரசுக்கு ஒரு தர்மசங்கடத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக காணப்பட்ட பொழுதும், முக்கியமாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் பெருமளவுக்கு அதை விரும்பாத ஒரு விஷயமாக காணப்படுகின்ற பொழுது, அதையும் தாண்டி பாலஸ்தீன மக்களுடைய எதிர்காலத்தையும், அவர்களுடைய உரிமையையும் கருத்தில் கொண்டு நியாயரீதியாக ஜனாதிபதி அதை குறிப்பிட்டிருப்பது உண்மையிலேயே வரவேற்கக் கூடிய விடயம்.
அதேநேரம் அந்த உரிமை என்கின்ற விஷயம் பலஸ்தீன மக்களுக்கு மட்டுமில்லாமல் சிறுபான்மை சமூகங்கள் எல்லாவற்றுக்குமே உரியது என்ற தெளிவும், இலங்கையிலே வாழ்கின்ற சிறுபான்மையினர்களுக்கும் அது உரியது எனும் தெளிவும் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும். இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலே இலங்கையிலும் அவர்களுக்கு அத்தகைய உரிமைகள் கிடைப்பதற்கான செயற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் இந்த விடயத்தை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் பகிர்ந்து கொண்ட பொழுது எங்களுக்கு ஏற்பட்டிருந்தது.
தனது நாட்டில் இன அழிப்பிற்குள்ளான தமிழினத்திற்கான நீதியினை வழங்க மறுக்கும் அனுர அரசின் பாலஸ்தீனம் மீதான கழிவிரக்கத்தை எப்படிப் பாரக்கலாம் ?
உண்மையில இலங்கையில் இந்த நிலைமையை பார்க்கிற பொழுது இலங்கை ஜனாதிபதி பலஸ்தீன மக்களுடைய உரிமை விடயத்தை அங்கீகரித்தது போன்ற ஒரு சமனான விடயத்தை இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு அவர் செய்வாரோ என்று பார்த்தால், இல்லை என்றுதான் கூறவேண்டும். எனினும் ஒரு அளவுக்கு அவர்களுடைய செயற்பாடுகள் நேர்மறையாக நல்லெண்ணத்துடன் இருப்பது போலத் தெரிகிறது. உதாரணமாக மாவீரர்களுடைய அல்லது யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுடைய நினைவேந்தல் விடயங்களை குறிப்பிடலாம். அதேபோல ஏனைய சில விடயங்களில் சாதகமான தன்மையை ஏனைய அரசாங்கங்களை விட சற்று தளர்வான ஒரு போக்கை அவர்கள் காட்டி இருந்தாலும் மிக முக்கியமாக குறிப்பிடப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது ஏனைய பொதுவான மன்னர் காற்றாலை திட்டம் போன்ற விடயங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு கடுமையான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருப்பதே தெரிகிறது. சில ஆய்வாளர்கள் கருத்துப்படி பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் வைத்திருக்க அரசாங்கம் முனைவதற்குரிய முக்கியமான காரணம் கடந்தகால கால அரசாங்கங்களைப் போல சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கும் போக்கு என்பதற்கு அப்பால், தங்களுடைய அரசாங்கத்தை தற்காத்துக்கொள்வது அல்லது பாதுகாத்துக்கொள்வதும் அரகல போன்ற பெரிய ஒரு போராட்டங்கள் உருவானால் அவற்றை ஒடுக்குவதற்கும் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் துரதிஷ்டவசமாக எவ்வாறு சொல்லப்பட்டாலும், இந்தச் சட்டம் தேவைப்படுகிற பொழுது தமிழர்களுக்கு எதிராக அல்லது சிறுபான்மையினருக்கு எதிராகவே தொடர்ச்சியாகப் பயன்படத்தப்படுகின்றது. குறிப்பாக மன்னார் காற்றாலை திட்டம், புவிசார் அரசியல் சக்திகள் குறிப்பாக இந்தியாவினுடைய தலையீடு இந்த நாட்டிலே பொருளாதார ரீதியாக வளங்களை சூறையாடுகின்ற அடிப்படையிலே அது ஏற்படுகின்ற பொழுது அவற்றுக்கு இடங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலும் அரசாங்கம் காணப்படுகின்றது. இதனை இதன் காரணமாக ஏற்படுகின்ற போராட்டங்களை அந்த போராட்டத்திலே தமிழர்கள் மட்டுமில்லாமல் ஏனைய இனத்தவர்களும் பங்கு கொண்டிருக்கின்றார்கள். இருந்த பொழுதும் கூட அவற்றை எதிர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு இவை தேவையாக இருக்கிறது. ஆகவே இந்த விடயங்கள் மறைமுகமாகவும் இன்னொரு வழியிலே பார்த்தால் அவை சிறுபான்மையினருக்கு எதிரானதாகவே காணப்படுகின்றன. ஆகவே நூறு வீதம் முற்று முழுதாக அனுர அரசு ஐக்கிய நாடுகள் சபையில் பிரதிபலித்த விடயத்தை இலங்கையில் அப்படியே கைக் கொள்ளுமா என்று கேட்டால் அதிலே இன்னும் பலமான சந்தேகங்கள் காணப்படவே செய்கிறது.
மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மீது அனுர அரசு மெற்கொண்ட மிக மோசமான தாக்குதலை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
உண்மையில் மன்னர் காற்றாலை திட்டம் தொடர்பான விடயத்திலே அரசு நடந்துகொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாக காணப்படுகிறது. ஏனென்றால். மக்களுடைய பிரதிபலிப்பாக, மக்களுடைய எண்ணங்களை கருத்தில் கொண்டு அவற்றைப் புரிந்து கொண்டு ஆட்சிக்கு வந்த ஒரு அரசு. மக்களுடைய பெரும்பான்மையான பலத்தை பெற்றுக்கொண்ட அரசு. மக்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்து கொள்ளாமல் அந்த விடயத்தில் நடந்து கொண்டது என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆகக்குறைந்தது ஜனாதிபதி என்பவரிடமிருந்து இதை நிறுத்த சொல்லி ஒரு அறிவித்தல் வரும். அதன் பின்னர் அவர் எங்களுடைய கருத்துக்களைக் கேட்பார். அதுபற்றி ஆராய்ந்து விட்டு மீண்டும் அதற்கான நிபந்தனைகளை விதிப்பார் அல்லது அனுமதிகளை தருவார் என்ற எண்ணம் பெருமளவுக்கு மக்களிடம் காணப்பட்டது. ஆனால் எந்தவிதமான அக்கறையும் இல்லாமல், எந்தவிதமான கருத்தும் கேட்கப்படாமல் ஒரு கட்டளை போல அந்த திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் படி அவர் குறிப்பிட்டது மிகவும் வருத்தத்துக்குரிய விடயமாக காணப்பட்டது. அது அனுர அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டமாக இல்லாத பொழுதும் கூட அது ஏனைய அரசாங்கங்களால் தொடங்கப்பட்ட திட்டமாக இருந்த பொழுதும் கூட நிச்சயமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் விடயத்திலும் சரி, சமூக ரீதியிலும் சரி பாதிப்பை ஏற்படுத்துகின்ற அல்லது பொருளாதார ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு கண்மூடித்தனமாக முனைவது என்பது மிகவும் ஏமாற்றம் தரக்கூடிய ஒரு விடயமாக அமைந்திருந்தது. அது போல இது அரசுக்கு அப்பாற்பட்ட புவிசார் அரசியல் சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக அரசு மேற்கொள்கின்ற ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே மிக முக்கியமாக மக்களுடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் கருத்தில் எடுத்து செயற்படுகின்ற அரசாங்கம் என்று குறிப்பிட்டாலும் கூட உலகவங்கி தன்னுடைய நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துதல், புவிசார் அரசியல் சக்தி கூடிய நலன்களைத் திருப்திப்படுத்துதல் போன்ற விடயங்களில் இந்த அரசு எந்தவிதமான சமரசத்துக்கும் சமரசத்துக்கும் வரப்போவதில்லை என்பது எங்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் இது பொருளாதார நெருக்கடியோடு தொடர்புடையது. இதிலே சமரசத்துக்கு வருகின்ற பொழுது இந்த அரசுகளுடைய எதிர்ப்பை சமாளிக்கின்ற பட்சத்தில் அல்லது எதிர்ப்பை சமாளிக்கின்ற பட்சத்தில், எதிர்ப்பை எதிர் கொள்கின்ற பட்சத்தில் நிச்சயமாக பொருளாதார ரீதியாக ஒரு பெரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டும் என்ற அச்சம் காட்டப்படுவதன் காரணமாக, அவர்கள் இதிலே ஒரு பெரிய சமரசத்துக்கு வருவதற்கு துணிய மாட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆகவே இது தவிர்க்க முடியாதபடி மக்களை இவர்கள் புறந்தள்ளுகின்ற அளவுக்கு நிலைமைகளை ஏற்படுத்தும் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசிற்கு தொடர்ச்சியாக கால நீடிப்ப வழங்குவது இலங்கை அரசை பாதுகாக்கவே என்று கருதலாமா ?
நிச்சயமாக. ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஏதுவான வகையிலே இலங்கை அரசாங்கத்துக்கு கால நீடிப்பு செய்யப்பட்டிருப்பது என்ற கருத்து நாம் எல்லோரும் அறிந்ததே. உண்மையிலே இது பற்றி நாங்கள் நிறைய பேசி இருக்கின்றோம். என்னவென்றால் இந்த சர்வதேச சமூகம் நலன் அடிப்படையிலேயே செயற்படுகின்றது என்ற விடயத்தை நாங்கள் எப்பவுமே மறந்து போக கூடாது. ஏனென்றால் முக்கியமாக இலங்கை என்பது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த இலங்கையின் இன்றைய நிலை இலங்கையினுடைய அமைவிடம் இலங்கையின் சார்புத்தன்மை என்பது நிச்சயமாக மேற்கு நாடுகளுக்கு அவசியமான ஒன்று. இலங்கையை சீனா போன்ற கீழைத்தேய, ரஷ்யா போன்ற கீழைத்தேய நாடுகளின் கைகளில் இலங்கையை சிக்கிவிடாமல் இருக்கச் செய்வது என்பது மேற்கு நாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படுவதால், இலங்கையைத் தம் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை அவர்கள் ஈடுபடுவார்கள். தவிர, எப்பொழுதும் இலங்கையைத் தண்டிப்பற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்ற தெளிவு கட்டாயமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் இலங்கையைத் தம் பக்கம் இழுப்பதற்காக இலங்கைக்கு ஒரு ஒரு வகையான கடுமையான நெருக்கடிகளைக் கொடுப்பதற்காக இந்த மனித உரிமைகளைப் பயன்படுத்துகிறார்களே தவிர, உண்மையிலே இலங்கையில் மனித உரிமை மேம்படவேண்டும். அல்லது இலங்கையனுடைய செல்வாக்கு, மக்களுடைய எண்ணங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே மேற்கு சார்ந்த சக்திகள் செயற்பட வேண்டும் என்று நினைப்போமானால் அதிலே நாம் மிகப்பெரிய ஏமாற்றத்தையே அடைந்து கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே அந்த அடிப்படையிலே பார்க்கிறபோது நாங்கள் சர்வதேச சமூகத்தினுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இலங்கையிலேயே நாங்கள் மனித உரிமைகளை பேணுவதற்கான வழிகளை மேற்கொள்வோம் என்ற கருத்தை மிக ஆணித்தரமாக கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் குறிப்பிட்டு இருந்த பொழுதும் கூட, அவர்கள் கால நீடிப்பு செய்கிறார்கள் என்றால் அல்லது எங்களுடைய எத்தகைய தண்டனைகளையும் வழங்காமல் அல்லது மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் இந்த அரசுக்கு உதவி செய்ய அவர்கள் நினைக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அவர்கள் தங்களுடைய நலன்களை அடைந்து கொள்வதற்காக இந்த அரசை தம் பக்கம் இழுக்கின்ற ஒரு செயற்பாட்டில் தான் ஈடுபட்டுள்ளார்கள் என்று தான் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த செயற்பாடுகளில் சில ஒருவித நன்மைகள், சில நன்மைகள் எங்களுக்கு ஏற்படலாம். நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் போவது போல சில நன்மைகள் எங்களுக்கு வரலாமே தவிர முழுமையாக எங்களுக்கு அது தீர்ந்து இருக்கிறது என்று சொல்வதற்கில்லை.
அனுர அரசு பதவியேற்று ஒரு வருடமாகிறது. ஆனால் பொருளாதார ரீதியிலோ அரசியல் ரீதியாகவோ மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாமை குறித்து கூறுங்கள் ?
உண்மையிலே இந்த அரசாங்கம் அதாவது ஜேவிபி மற்றும் எம். பி அரசாங்கம் கடந்த காலங்களிலே ஏற்கனவே ஆட்சியில் அமர்ந்திருந்திருக்கிறது. உதாரணமாக சந்திரிக்கா குமாரதுங்கவுடைய காலப்பகுதியில் ஜேவிபி அந்த ஆட்சியிலேயே பதவி வகித்து இருக்கிறது. ஆகவே அந்த வரலாற்று அனுபவங்களை நாங்கள் பார்க்கிற பொழுது நிச்சயமாக ஆட்சியிலே அமர்கின்ற பொழுது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை அவர்களால் செய்ய முடிவதில்லை. எதிர் கட்சியிலே இருந்து அவர்கள் பேசிய பேச்சுக்களை செய்ய முடிவதில்லை. இது நிதர்சனமான உண்மை. இந்த ஆட்சியில் சில வேறுபாடான நிலைமைகள் காணப்படும் அல்லது அவர்கள் வித்தியாசமாக இருப்பார்கள் என்ற எண்ணம் எங்களுக்கு காணப்பட்டு இருந்த பொழுதும் கூட, துரதிஷ்டவசமாக அவ்வாறு இடம்பெறுவது போன்ற எந்தவிதமான இடங்களும் காணப்படவில்லை. இதனாலே முக்கியமாக நாங்கள் இதிலே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் பல விடயங்கள் முக்கியமாக அனுர அரசு பல வர்த்தர்களை திருப்திப்படுத்த வேண்டி இருக்கிறது. பல உலக நாடுகளை திருத்தி எழுத வேண்டியிருக்கிறது. இவர்கள் எல்லாருமே இந்த அரசுக்கு இந்திய தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவி செய்தவர்கள். இதை எல்லாம் தாண்டித்தான் மக்களுக்கான உதவி, மக்களுக்கான சேவை, நாட்டுக்கான உதவி என்பது போன்ற விடயங்களில் கவனம் செலுத்த கூடியதாக இருக்கும். ஆகவே இன்று புவிசார் அரசியல் சக்திகள், உலக வங்கி இவை போன்றவை திருப்திப்படுத்தவேண்டிய தேவைகள் காணப்படுகின்றன. ஆகவே நாங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு. எல்லா விடயங்களும் வெற்றிகரமாக நடந்தேறும் என்று சொல்வதற்கில்லை.
Post a Comment