மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இன்று(18) காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வை கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்நினைவேந்தல் நிகழ்வின்போது முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் பரிமாறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment