நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் வியாழக்கிழமை காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது.
குறித்த வீதித் தடை எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். என்பதுடன் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீதித்தடைகளை அமைப்பது தொடர்பாக நேற்றைய தினம் புதன்கிழமை துறைசார் அதிகாரிகளால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ் மாநகர ஆணையாளர் என்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டனர்.
0 Post a Comment:
Post a Comment