சற்று முன்
Home / உலகம் / ஹெலிகொப்டர் விசிறி தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு – கிறீஸ் நாட்டில் சம்பவம்

ஹெலிகொப்டர் விசிறி தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு – கிறீஸ் நாட்டில் சம்பவம்

ஹெலிகொப்டர் பின்புற விசிறி தாக்கியதால், உல்லாசப் பயணியான ஓர் இளைஞன் தலைதுண்டிக்கப்பட்டு உயிரிழந்தசம்பவம் கிறீஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனைச் சேரந்த ஜோன் பென்டொன் எனும் 21 வயது இளைஞரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஜோன் பென்டொன், தனது குடும்பத்தினருடன் கிறீஸுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தார். இவர்கள் மைகோனோஸ் எனும் சுற்றுலா தலத்திலிருந்து, தலைநகர் ஏதென்ஸுக்கு ஹெலிகொப்டரில் திரும்பி வந்தனர்.

ஜோன் பென்டோன் பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்கியபின், ஜோன் பென்டோன் ஹெலிகொப்டரிலிருந்து வெளியேறி சிறிது நேரத்தில் ஹொலிகொப்டரின் பின்புற விசிறி தாக்கியதால் அவர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் செல்பீ எடுத்துக்கொண்டிருந்தபோது, ஹெலிகொப்டர் விசிறி தாக்கியதாக கிறீஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும், இத்தகவலை பென்டோனின் நண்பரும், சகோதரியும் நிராரித்ததனர்.

மேற்படி ஹெலிகொப்டரின் விமானியும் தரையில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களும் கைது செய்யப்பட்டுபின்னர் விடுவிக்கப்பட்டனர்.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com