சற்று முன்
Home / சினிமா / திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

அவருக்கு வயது 70. மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரதாப் போத்தன் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா ,வெற்றி விழா ,மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி ,லக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். பிரதாப் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ,இயக்குனர், எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளராகிய பன்முக தன்மையை கொண்ட பிரதாப் போத்தன் 1980ல் தனது திரைப்பட திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். தமிழ், தெலுங்கு ,மலையாளம் , இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குனர் படத்திற்கான இந்திரா காந்தி விருது,  கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

கதாநாயகனாக சில படங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனங்களை வென்றவர் நடிகர் பிரதாப் போத்தன். திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரதாப் தான் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழில் முதல்முறையாக கமலின் வெற்றி விழா படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியவர் பிரதாப் போத்தன்.  

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார். நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்து 1986ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.  அத்துடன் அமலா சத்யநாத் என்பவரை 1990 ஆம் ஆண்டு மணந்த இவர் 2012ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com