Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செம்மணியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – நல்லூர் பிரதேச சபைக்கு சட்ட உதவி வழங்கத் தயார் என்கிறார் சட்டத்தரணி மணிவண்ணன்

மருத்துவக்கழிவுகளை கிடங்கு வெட்டி புதைப்பதற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடர தீர்மானித்தால் சட்ட உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என தமிழ் தேசிய மக்கள் மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

செம்மணி சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட இந்த மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இந்த மாயனத்தின் பாதுகாப்பு முழுவதும் நல்லூர் பிரதேச சபையினுடையதே, அவ்வாறு இருக்க இந்த மயானத்தில் அத்துமீறி நுழைந்து , மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

பிரதேச சபை இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானித்தால், அதற்கான சட்ட உதவிகளை இலவசமாக வழங்க தயாராக உள்ளேன் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com