Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் 2 பேர் இன்று (ஏப்ரல் 7) செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அவர்களில் 42 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

137 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 257 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 20 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

கோப்பாயில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 18 பேருக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்குமே இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com