Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முன்னணியின் வேட்பாளர் பட்டியல் இதுதானாம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைப் பூர்த்தி செய்யும் முனைப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வகையில்,

01) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
02) செல்வராஜா கஜேந்திரன்
03) விஸ்வலிங்கம் மணிவண்ணன்
04) கனகரட்ணம் சுகாஸ்
05) நடராஜா காண்டீபன்
06) வாசுகி சுதாகரன்
07) ஜெயக்குமார் (சாவகச்சேரி)
08) கணபதி (கிளிநொச்சி)

ஆகியோரது பெயர்கள் இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஏனைய இருவரில் ஒருவராக கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியோடு முன்னணியில் இருந்து ஒதுங்கிய பத்மினி சிதம்பரநாதனை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முன்னணியைச் சேர்ந்த ஒரு தரப்பு ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் கட்சிக்குள் பத்மினி சிதம்பரநாதனுக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது வேட்பாளராக யாழ் மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு ஐந்து வாக்குகளால் தேல்வியடைந்த விஸ்னுகாந்த் மற்றும் தீபன் திலீசன் உள்ளிட்டவர்களது பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை தமிழரசுக்கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மற்றும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜங்கரநேசன் உள்ளிட்டோரும் முன்னணியில் இணைந்து போட்டியிட ஆர்வம் காட்டிவருவதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com