Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சைக்கிளில் சரா ? அதிர்ச்சியில் சுமா !

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் உதயன் பத்திரிகை உரிமையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கு இடமில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தமது பத்திரிகையில் முக்கியத்துவம் வழங்கி தேர்தல் பிரச்சாரங்களில் ஒத்துளைப்பது என்ற உடன்பாட்டோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து போட்டியிடுவதற்கு சரவணபவன் தரப்பு முனைப்புக் காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனுக்கும் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்குமிடையில் நிலவிவந்த பனிப்போர் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில் சரவணபவனுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனம் வழங்க வேண்டாம் என சுமந்திரன் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. பின்னர் சுமந்திரனும் அதனை ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் சுமந்திரனுக்கு எதிராக தனது பத்திரிகை ஊடாக சேறுபூசும் வேலைகளில் சரா ஈடுபட்டு தமிழரசுக் கட்சியை மிரட்டிப் பார்க்க முனைந்திருந்தார். இந்நிலையிலேயே தமிழரசுக் கட்சியில் போட்டியிட சவணபவனுக்கு ஆசனம் ஒதுக்குவதில்லை என்ற முடிவுக்கு தமிழரசுக் கட்சி வந்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்தே சரவணபவன் தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பேச்சுநடத்த முனைப்புக் காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இத் தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தரப்பு மறுத்துள்ளபோதும் உதயன் பத்திரிகைக்கு எதிராகவோ சரவணபவனுக்கு எதிராகவோ தமிழரசுக் கட்சியுடன் இணைந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிர்வதை நிறுத்துமாறு கட்சியின் தலைமைப்பீடம் சமூக வலைத்தள பிரச்சாரங்களில் ஈடுபடும் தமது தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com