Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

யாழில் மீண்டும் சுற்றி வளைப்பு – இராணுவம் குவிக்கப்பட்டு வீடு வீடாக சோதனை

யாழ்ப்பாணத்தில் ராணுவம் போலீஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வீடு வீடாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் (22) யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளில் சோதனை நடவடிக்கையில் படைத்தரப்பினர் ஈடுபட்டதோடு சந்தேகத்துக்கிடமான வீடுகள் மற்றும் பொது இடங்களிலும் முப்படையினரால் சோதனையிடப்பட்டது.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் சித்திரை 21 இல் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு பிரதேசமும் சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாக இராணுவ சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் இராணுவத்திற்கான அதிகரங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவ சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com