Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தெற்காசிய விளையாட்டு போட்டி ;களமிறங்கும் முதல் தமிழ் வீராங்கணை..

தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா இடம்பெறவுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு விழா ஆரமமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்ஷிகா தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார்.

2014ம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

கனிஷ்ட பிரிவில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 4 தங்கப்பதக்கங்களையும், சிரேஷ்ட பிரிவில் 3 வெள்ளி, 2 தங்கப்பதக்கங்களையும் ஆர்ஷிகா வென்றுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பளு தூக்கல் போட்டிகளில் மூன்று தேசிய சாதனைகளுடன் வெற்றியீட்டியவர்.

இப்படி பல சாதனைகளை படைத்துள்ள ஆர்ஷிகா, தெற்காசிய போட்டிகளிலும் சாதிப்பார் என்ற நம்பிக்கையுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com