Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் விளைவுகளினால் அத் திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி காலம் கடந்து உணர்ந்துள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போது உணர்வதால் எவ்வித பயனும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.  

அத்துடன் இவ் வருடத்தில் தேர்தலுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசியலமைப்பினை மாற்றியமைப்பதற்கு  போதுமான காலம் தற்போது கிடையாது.  ஒருவேளை இரத்து செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்தில்  மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு  கிடைக்கப் பெற வேண்டும்.   

தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தில் எத்தரப்பினரிடமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு  கிடையாது. ஆகவே   அரசியலமைப்பினை  இரத்து செய்ய வேண்டும் என்பது சாத்தியமற்றது.  நிலையான ஒரு அரசாங்கத்திலே  அரசியலமைப்பில் காணப்படுகின்ற குறைப்பாடுகளும், முரண்பாடான ஏற்பாடுகளும் பாராளுமன்ற   பொருள்கோடலுக்கு அமைய  திருத்தியமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹகுரன்கெல மெதவெல பகுதியில் இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com