Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விபத்தில் குடும்பஸ்தர் பலி.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பருத்தித்துறை ஓராம் கட்டைக்கு அண்மையில் இடம்பெற்றது.

சம்பத்தில் பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் புவிகரன் (வயது-38) என்பவரே உயிரிழந்தார்.மந்திகைப் பகுதியிலிருந்து வீடு திரும்பிய வேளை வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள், மதிலுக்கும் மின் கம்பத்துக்கும் இடையே புகுந்து விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்ற குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com