Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிவாஜி அண்ண போர் நிறுத்தமாமுங்கோ….!!! (சவாரி 46)

வணக்கமுங்கோ

வயிரவியர கனநாளாக் கணேல்ல. பிக் பாசு மாதிரி சீசனுக்கு சீசன் வந்துட்டுப் போறார் எண்டு கோபத்தில இருப்பியள் எண்டு விழங்குதுங்கோ ஒரு வருசமாப்போச்சுங்கோ. என்ன செய்யிறது எங்கண்ட ஆக்கள் தாற சம்பளத்துக்கு ஒரு இடத்தில நிண்டு நிலைகேலுமோ செல்லுங்கே. முதலாளி அடிச்சு எழுததெண்டு சொன்னா ஒராள அடிச்சு எழுதுறது. பம்மிப் போ எண்டா பொத்திக்கொண்டு போறது எண்டுதானுங்கோ இப்ப கிடக்குது நாட்டு நிலம. வாத்தியாரா நிண்டு படிப்பிக்கேக்குள்ள தருமம் அறம் எண்டு விளாசித் தள்ளுறதுங்கோ. அவரே முதலாளிய மாறேக்குள்ள தலையில அடிச்சு அடிச்சு கோதாரி ஆருக்கெட தருமம் பற்றி எழுதுறியள். கொம்பனி துண்ட விரிச்சுப்போட்டு பிச்சை எடுக்கிறதோ எண்டு கத்துறதுங்கோ.

உதுதானுங்கோ ஒவ்வொரு முதலாளியும் பிறசர் குளிசையோட திரியுறீனுமுங்கோ. சிவாஜி அண்ணையும் போர்நிறுத்தம் அறிவிச்சுப்போடுத்து. உதவச்சு கொஞ்சநாளைக்கு வஞ்சம் தீர்ப்பம் எண்டு திரிஞ்ச தடிப் பசங்களெல்லாம் என்ன செய்யப்போறாங்களெண்டு தெரியேல்லயுங்கோ. நானும் அங்க இஞ்ச எண்டு இழுபட்டுக்கொண்டு திரியுறனுங்கோ. இந்த வயசுபோன நேரத்தில. வீட்டில நிண்டு ஏதாச்சும் எழுதி அனுப்பலாம் எண்டாலும் வாங்கி போட்டுட்டு காசு போடுறாங்களில்லயுங்கோ. பேசமா பழசாக்கிடக்கிற வண்டிலத் திருத்தி தேங்காய் யாவாரமாச்சும் செய்வம் எண்டு வெளிக்கிட்டு பலாலி றோட்டில ஏறினா ஒரே குப்பை குப்பையா கொட்டி வச்சிருக்கிறாங்களுங்கோ.

தென்னிலங்கையில் குப்பை மேடுகள் கூடிப்போச்செண்டு கண்ட கழிவுகளை எல்லாம் இங்க கொண்டுவந்து கொட்டுறாங்களுங்கோ. சுன்னாகம் கரண்டு குடுக்கிற இடத்தில குப்பை, பஸ் டிப்போவில குப்ப எண்டு பாத்தா இப்ப கம்பசுக்குள்ளயும் குப்பையளக் கொண்டுபோய்க் கொண்டுறாங்கள் எண்டு தம்பி ஒண்டு கதைச்சுக்கொண்டு நிண்டதுங்கோ.

“என்ன தம்பி இப்பத்தான டெங்கு அழிப்பெண்டு வீடுவீடாப் போய் பிடிக்கிறாங்கள். ஏதோ “ஸ்பொட்டு பைன் எண்டு காசு அடிக்கிறாங்களாம்”, கோட்டுக்கு ஏத்துறாங்களாம். சனமெல்லாம் வெலவெலத்துப்போய் நிக்குதுகள். வளவுக்குள்ள ஒரு சிரட்டைத்துண்டு கிடந்தாலும் விடுறாங்களில்ல எண்டு. நீங்கள் டிப்போவில குப்ப, சுன்னாகத்தில குப்பை, கம்பசுக்குள்ள குப்பை எண்டு கதை சொல்லுறியள்” எண்டு கேட்டனுங்கோ
தம்பிக்கு கோபம் வந்திருக்கோணும். என்ன பழசு வியசம் விழங்காம கதைக்கிறீர். நான் சீரியசாக் கதைச்சுக்கொண்டு நிக்கிறன். நீர் குறுக்க வந்து என்ன டெங்கு. பைன் எண்டு கண்டதைக் கதைச்சுக்கொண்டு நிக்கிறீர் எண்டு பொடியன் சூடாயிட்டான்.

நான் சொன்னன். இல்லயப்பு, கோபப்படாதையும் இப்பத்தயப் பொடியளுக்கு எத எடுத்தாலும் உனட கோபம் வரும் எடுத்தன் கவிழ்த்தன் எண்டு ஏவலில ஏதாச்சும் செய்யுறது. பிறகு பல்டி அடிச்சு நிக்கிறது. ஒண்டு சொன்னா கோபப்படமாட்டீர் எண்டா உதாரணம் ஒண்டு சொல்லுறன். எங்கண்ட கம்பசுப் பொடியள் இருந்த உண்ணாவிரதம் போல எண்டு சொல்லலாம். அந்தக்காலத்திலயும் கம்பஸ் பொடியஸ் எத்தின போராட்டங்களைச் செய்தவங்கள். அவங்களுக்கு உணர்வும் இருந்தது அந்தளவுக்கு விவேகமும் இருந்தது. எத்தன நெருக்கடீக்கயும் எதையும் பிளாள் பண்ணிச் சொய்வானுங்கள் தொரியுமே. நான் மாட்டுவண்டி ஓடின காலத்தில. அவங்கண்ட பேரணியளிளல என்ர வண்டியும் ஒரு ஊர்தியா நிக்கும் தெரியுமோ. இப்ப என்னத்தச் செய்யுறியள்.

எதுக்கெடுத்தாலும் கொழும்புக்கு ஓடுறியள். கொழும்பில உங்களுக்கு தெரிஞ்ச சாணக்கியமான ஆக்கள் ஆரும் இருக்கீனுமோ எண்டு எனக்குத் தெரியாது. கண்டபடி கொழும்புக்குப் போறத விட்டுட்டு இஞ்ச நிதானமா நிண்டு எதயும் யோசிச்சுச் செய்யுங்கோ எண்டனுங்கோ.

பெடியனும் கம்பஸ் பொடியன். நான் சொன்னதும் கொதிச்சிட்டான். வயது போச்செண்டு பாக்கறிறன். சும்மா பொடியள் பெடியள் எண்டு கண்தையும் கதைக்காதயும். கம்பசுக்குள்ள நடக்குறதுகள் எல்லாம் உமக்குத் தெரியுமோ. முந்திய மாதிரி எங்களால எதுவும் செய்ய ஏலாது ஒவ்வொரு அமைப்புக்குள்ளயும் ஆரார் இருக்கிறாங்கள், ஆற்ற ஆற்ற ஆக்கள் இருக்கிறாங்கள் எண்டு தெரியாது. ஆலோசன சொல்லுறமாதிரி சொல்லி ஒருத்தற்ற பக்கம் இழுத்து விடுறானுங்கள் கடைசியல முட்டிமோதி நிக்கேக்கதான் எங்க போய் விழுந்தனாங்கள் எண்டு தெரியுது. எண்டு ஒரு பஞ்சாயத்தே வச்சு முடிச்சுது பொடியன்.

இது சரியப்பு ஏதோ கம்பசுக்குள்ள குப்பை எண்டு சொன்னீர் அது என்னண்டு சொன்னா…………… எண்டு இழுத்தன். நீர் தெரிஞ்சு என்ன செய்யப்போறீர் எண்டு பொடி ஒரு பார்வை பாத்துச்சுங்கோ. பேசாமல் நடையைக் கட்டிக்கொண்டு வந்திட்டன்.

ஆனாலும் கம்பசுக்குள்ள கொட்டுற குப்பை என்ன எண்டு அறியாம தலை வெடிச்சிடும்போல இருக்குங்கோ. கம்பசுக் கதையள அறிய ஒராள் இருக்குங்கோ. அறிஞ்சு வாற கிழம சொல்லுறனுங்கோ. நீங்களும் ஏதாச்சும் கதையள் அறிஞ்சா vairaviappu@gmail.com க்கு அனுப்பிவையுங்கோ.
நான் போட்டு வாறனுங்கோ

  • வண்டில்கார வைரவி அப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com