ஆளுநர் விகாரைக்கு காணி பிடிப்பதாக குற்றச்சாட்டு

சர்ச்சைக்குரிய கொக்கிளாய் விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியினை விற்பனை செய்யுமாறு புதிய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே காணி உரிமையாளர்களிற்கு நெருக்குவாரங்களை கொடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆளுநரது தரகராக செயற்பட்டு வரும் கிறீஸ்தவ தமிழ் மதகுருவொருவரே இத்தகைய அழுத்தங்களை ஆளுநர் தரப்பில் பிரயோகித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நயினாதீவில் 67 அடி உயர புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் சர்ச்சைக்குரிய பிக்குவை அழைத்து பத்திரிகையாளர் மாநாடொன்றை ஆளுநர் நடத்தியிருந்தார்.

 

குறித்த மாநாட்டில் மொழிபெயர்ப்பில் குறித்த கத்தோலிக்க மதகுரு பிரசன்னமாகியிருந்தார். அப்பொழுது கொக்கிளாய் விகாரை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது தான் விகாரை பற்றி அறிந்திருக்கவில்லையென ஆளுநர் தெரிவித்திருந்தார்.

 

எனினும் இவ்வாறு தெரிவித்துக்கொண்டு சத்தமின்றி காணிகளை விற்பனை செய்யுமாறு அதன் உரிமையாளர்களிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.எனினும் காணி உரிமையாளர்கள் அதனை விற்பனை செய்ய மறுதலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com