Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நள்ளிரவு முதல் வகுப்பு தடை!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான, மேலதிக வகுப்புக்களை நடத்த இன்று (2) நள்ளிரவு 12.00 முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதியுடன் பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் வரை குறித்த தடை நீடிக்கப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப் பகுதியில் மேலதிக வகுப்புக்களை ஒழுங்கு செய்தல், கருத்தரங்குகளை முன்னெடுத்தல், பரீட்சையுடன் தொடர்புடைய மாதிரி வினாக்களுடனான கேள்வி பத்திரங்களை வௌியிடல், அதனை விநியோகித்தல் போன்றவற்றுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரேனும் இந்த விதிகளை மீறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார மேலும் கூறியுள்ளார்.  இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள், எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேலும், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com