சற்று முன்
Home / பிரதான செய்திகள் (page 173)

பிரதான செய்திகள்

சர்ச்சைகளிற்கு மத்தியில் ஜ.நா.விற்கான பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

பெரும் கூச்சல் குழப்பங்களுடன் வாதப் பிரதிவாதங்களுடன் ஆரம்பித்த வடக்கு மாகாண சபையின்  அமர்வில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்திற்குரிய அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன் தீர்மானிக்கப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் பிரேரணை” நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையை வடக்கு ...

Read More »

சுமந்திரனை கொல்ல முயற்சித்தவர்களாம் – முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு – ஒருவரிற்கு பிடிவிறாந்து

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐந்து பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் ...

Read More »

வெருட்டியது தமிழரசு – பணிந்தன ரெலோ, புளொட் – திமிறி வெளியேறியது ஈபிஆர்எல்எவ்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள் இணங்கியுள்ளதாக தெரியவருகின்றது. தேர்தல் உள்ளிட்ட விடையங்களில் தமிழரசுக் கட்சி தனித்து நின்று தனது பலத்தினை நிரூபிப்பதற்கான திரை மறைவு வேலைத்திட்டங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் தீர்மானத்தை எதிர்த்தால் தமிழ்த் ...

Read More »

ஜ.நா விற்கான கூட்டு விண்ணப்பத்தில் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் கையொப்பம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு இலங்கை அரசாங்கம் சவால் விடும்வகையில்  செயற்பட்டுவரும் நிலையில் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம் என வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள் , அரசியல்க் கட்சிகள் , அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழகவிரிவுரையாளர்கள் , செயற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட கூட்டுமனுவில் இன்றுவரை ...

Read More »

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களை மீளப்பெற்றார் சுமந்திரன்

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்­கக் கூடாது என்று கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்கு கடி­தம் எழு­தி­யமை தொடர்பில் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தான் விமர்சித்திருந்த கருத்துக்களை மீளப்பெறுவதாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவித்துள்ளார். கடும் சர்ச்சை­க­ளோடும் வாக்­கு­வா­தங்­க­ளோடும் நேற்று (08) நடை­பெற்­ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் ஐ.நா. ...

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் – துரைராஜசிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாடசாலை அதிபர் எஸ்.முருகானந்தன் தலைமையில் ...

Read More »

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – தமிழக மீனவர் பலி – மற்றொருவர் படுகாயம்

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை மீண்டும் தனது அத்துமீறலை அரங்கேற்றியுள்ளது. இந்த தாக்குதலில் மீனவர் ஒருவர் பலியானார். மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று சுமார் 500 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு ...

Read More »

சோமாலியாவில் 48 மணி நேரத்தில் பட்டினியால் 110 பேர் பலி

சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் பட்டினியால் 110 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஹசன் அலி ஹைரே தெரிவித்துள்ளார். தென் மேற்கு பே பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இது. ஆனால், ...

Read More »

எருமை மாடு – நாயே -………….. – நடு வீதியில் தாண்டவமாடிய பொலிஸ் அதிகாரி – ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் அசிங்கம்

எருமை மாடு மாதிரிக் கதைக்கிறியே படிச்சிருக்கிறியா மண்டைக்குள் சரக்கு இல்லையா என  யாழ் பொலிஸ் அதிகாரி ஒருவார் காணாமால் போனோர் உறவுகளைப் பார்த்து திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் நிகழ்சித்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இனறையதினம் யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்திருந்த நிலையில் காணாமல் போனோர் உறவினர்கள்  ஜனாதிபதியின் கவனத்தை ...

Read More »

வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை – சு.க நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி

ஒருபோதும் வௌிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்கு அழைப்பதற்கு தயாரில்லை என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். வௌிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி கூறியுள்ளார். 24 மணித்தியாலங்களுக்கு முன்னரே அந்தக் கருத்துக்கு மறுப்புத் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com