Home / உலகம் / எட்னா எரிமலை வெடித்தது

எட்னா எரிமலை வெடித்தது

இத்தாலி நாட்டில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை கக்கி வருகின்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா, இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ளது.

கடந்த மாத இறுதியில் கரும்புகையை வெளியிட்டு வந்த எட்னாவில் தற்போது சீற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. எரிமலையின் முகப்பு பகுதியில் இருந்து லாபா எனப்படும் நெருப்பு குழம்பும், சாம்பலும் வெளியாகி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில நாட்களுக்கு முன்பு எரிமலை சுற்றுவட்டாரங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது இரவு நேரங்களில் எரிமலையில் இருந்து லாவா நெருப்பு குழம்பாக பாய்வதை தூரத்தில் இருந்தபடி சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். எட்னா எரிமலை எடுத்த சில நாட்களுக்கு எரிமலை குழம்பை வெளியிடும் என்று தெரிவிக்கும் இத்தாலி நிலவியல் அதிகாரிகள், எரிமலை சீற்றத்தை 24 மணி நேரமும் நிபுணர்கள் கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர்.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சிறுவர் மருத்துவமனையின் பணிகள் முடக்கம்

வெளிநோயாளர் பிரிவில் நடத்தப்படும் கிளினிக் நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com