சற்று முன்
Home / இந்தியா / இந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!

இந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!

இந்தியாவில் செயலிகளை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, உலகத் தரம்வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில் ‘ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு’ என்ற சவாலில் பங்கேற்குமாறு பிரதமர் இளைஞர்களை அழைத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “உங்களிடம் செயலி போன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான நிபுணத்துவம் இருப்பதாக உணர்ந்தால் இந்த சவால் உங்களுக்கானது. தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உள்நாட்டு பயன்பாடுகளை புதுமைப்படுத்தவும், மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பினரிடையே பெரும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் காண்கிறோம்.

இன்று, ஒட்டுமொத்த தேசமும் ஒரு ஆத்மனிர்பார் பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, அவர்களின் முயற்சிகளுக்கு வழிகாட்டுதலையும், அவர்களின் கடின உழைப்புக்கு வேகத்தையும், நமது சந்தையை திருப்திப்படுத்தக்கூடிய மற்றும் போட்டியிடக்கூடிய பயன்பாடுகளை உருவாக்க அவர்களின் திறமைக்கு வழிகாட்டுதலையும் வழங்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில், சீனாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் செயற்பாட்டில் உள்ள சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து செயலி தயாரிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பதவியேற்க முன்பே மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

நாளை முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com