சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 20)

முக்கிய செய்திகள்

பிரபாகரனுடன் பசில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி

தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதை நிறுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பசில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ராஜபக்ஷவினரின் நோக்கம் ...

Read More »

முககவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள்!

“வடமாகாணத்தில் கோரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் கோரோனா தொற்றுடைய ஒருவர் வடமாகாணத்துக்கு வருகை தந்தால் அவரிலிருந்து இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன” எனவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி ...

Read More »

யாழ். பல்கலை. கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டு, விடுதியில் தங்கியிருந்த 330 மாணவர்களும் தனிமைப்படுத்தப்படுள்ளனர். வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 13) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

கிளிநொச்சி மக்களே அவதானம்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் நுட்பபீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் கிளிநொச்சி வாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். ...

Read More »

நான் கறிவேப்பிலை இல்லை – வெடித்தார் சசிகலா ரவிராஜ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும்  ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருக்கவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். அந்த வகையில் தான்  பரப்புரை நிகழ்வுகளில் நான் பங்கேற்கிறேன். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  ஒன்பது சகோதர வேட்பாளர்களுடனும் சேர்ந்து ...

Read More »

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த பொலிஸார் நடவடிக்கை

தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கோரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பிரதிநிதி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தினார். அதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; பதில் பொலிஸ் மா ...

Read More »

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. எனினும் அநுராதபுரம் நகராட்சி, ராஜாங்களை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியின் தபால் வாக்களிப்புக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நெருக்கடி காணப்படுகின்ற ...

Read More »

கொரோனா தொற்றைத் தடுக்கும் பணியில் உள்ளோருக்கு நலம் வேண்டி 108 நாள்கள் விரதம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கும் முப்படை மற்றும் பொலிஸார் உள்பட சுகாதார சேவையினருக்கு தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க இறைவனை வேண்டி 108 நாள்கள் விரதமிருந்த 81 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவர், தனது நேர்த்தியை நிறைவு செய்யும் வகையில் தலை முடியை காணிக்கை செய்துள்ளார். யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியைச் ...

Read More »

ராஜாங்கணை பிரதேச தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்

அநுராதபுரம் ராஜாங்கணை பிரதேச தபால்மூல வாக்களிப்பு மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன என்று அந்த மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார். மாற்றுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவருக்கு ஏற்பட்ட கோரோனா தொற்றுக் காரணமாக ராஜாங்கணை பிரதேசத்தில் இன்று மட்டும் நான்கு பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ...

Read More »

வெடிபொருளை வெடிக்கவைத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது

குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கீரிமலை கோவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குப்பைக்குள் காணப்பட்ட பற்றியுடன் கூடிய வீரியம் குறைந்த வெடிபொருள் ஒன்றை நால்வரும் கண்டெடுத்துள்ளனர். ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com