சற்று முன்
Home / Author Archives: sri viththi

Author Archives: sri viththi

மாணவர்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

பிபில பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் பிபில – கனுல்வெல முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களே காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெல்லஸ்ஸ தேசிய பாடசாலைக்கு விளையாட்டு ...

Read More »

மின்சாரக் கட்டணத்தை 75% அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிப்பதற்கு CEBக்கு PUCSL அனுமதி வழங்கியது.

Read More »

அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்?

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், சந்தையில் அரிசி விற்பனையும் குறைந்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.இந்நிலையில் எதிர்காலத்தில் விலை குறையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Read More »

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கையில்,சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை நிறுவனம் தற்போது தயாரித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான ...

Read More »

பொது போக்குவரத்து வாகனம் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்காக வழங்கும் எரிபொருள் அளவில் மாற்றம்?

எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது. இன்று(08) காலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபை (CTB) மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான  எரிபொருள் ...

Read More »

நாடளாவிய ரீதியில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு IOC க்கு அனுமதி

இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐஓசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக LIOC முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Read More »

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Read More »

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் நாட்டில் மேலும் 184 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இந்த தொற்றாளர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ...

Read More »

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு

இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும், பஞ்சாப்பில் 400-க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இது அந்தந்த மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ...

Read More »

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட யோசனை, இன்று (08) கையளிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 43ஆவது படைப்பிரிவுடன் ஜனாதிபதி செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com