சற்று முன்
Home / Author Archives: Jaseek (page 707)

Author Archives: Jaseek

திருட்டுக்குற்றத்தில் பெண் கைது

திருட்டுக் குற்றசாட்டில் விளக்கமறியலில் உள்ளவரின் மனைவி பெண்ணொருவரின் பணத்தை திருடிய குற்றத்தில் யாழ்ப்பான பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.பஸ் நிலையப்பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுவருடத்தை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்து விட்டு யாழ்.பஸ் நிலையத்தில் வீடு செல்வதற்கு பஸ்க்காக காத்திருந்த பெண் ஒருவரின் ...

Read More »

யாழில்.தாயையும் மகளையும் காணவில்லை

யாழில். தாயையும் அவரது மூன்று வயது பெண் குழந்தையையும் காணவில்லை என யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஈச்சமோட்டை சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் ஜானகி (வயது 23) மற்றும் அவரது மகளான மோகன்ராஜ் சுருதிகா (வயது 3) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர். கடந்த 10ம் திகதி வீட்டை விட்டு வெளியே ...

Read More »

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு 20ம் திகதி வரை விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ம் , மற்றும் 12ம் சந்தேக நபர்களை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ம் , 12ம் சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ...

Read More »

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் காரணம் அறியாது மின்மானி பெட்டியை பரிசோதனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கினிகத்தேனை பிரதேச பகுதியில் 11.04.2016 அன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வீட்டின் உரிமையாளரான ஏ.நுவான் சந்துரங்க (வயது 34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ...

Read More »

சி.வி.க்கு அழைப்பு.

வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் எதிர்வரும் 18ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு, தனக்கு அழைப்பு வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...

Read More »

அரசியலமைப்பு தொடர்பிலான வடமாகாண சபையின் அமர்வு ஒத்திவைப்பு .

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைவு தொடர்பிலான விசேட  மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 49ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இன்றைய அமர்வில் அரசியலமைப்பு திருத்தத்திற்காக வடமாகாண சபையினால் முன் வைக்கப்படவுள்ள தீர்வு திட்டம் ...

Read More »

துர்முகி வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி  வருடம் 13.04.2016 அன்று மாலை மலரவிருக்கின்றது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி  13 ஆம்  திகதி  இரவு 6.30 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை புண்ணிய  காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம்  இலையும் வைத்து  மருத்து  நீர் தேய்த்து நீராட  வேண்டும் என்றும் ...

Read More »

சிறுவனை காணவில்லை

அட்டன் ரொசல்லை ஹில்வுட்டை சேர்ந்த ராமதாஸ் மனோரஞ்சன் என்ற 12 வயது மாணவனை கடந்த 9 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயாரால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக அவர் கறுப்பு நிற முழுக்கை டீ சேர்ட்டும் கடும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரைப்பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் ...

Read More »

பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும் டக்ளஸ் தேவானந்தா

நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு வந்திருந்தான். அது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது. அதுபோல இங்கும் செய்யப்படவேண்டும் என நான் எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரவிருக்கும் ...

Read More »

முள்ளிவாய்க்கால் மனித அவலத்தின்போது முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயமற்றது! அஸ்மின்

முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மனித அவலம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயப்படுத்த முடியாத ஒன்றேயாகும் என வட மாகாண சபைஉறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் ரீதியாக தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பல்வேறு நம்பிக்கையூட்டும் விடயங்கள் இடம்பெற்றுள்ளபோதும், அவை எதுவும் பெரிதாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com