சற்று முன்
Home / Author Archives: Jaseek (page 30)

Author Archives: Jaseek

பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம் – செல்லத்துரை சுதர்சன்

உயர் பசிலிகாவின் கீழறை உறங்கும், முதுபெரும் ரோமின் பேதுருவே! லத்தீன் சிலுவையுருவப் பேராலயத் திருக்கதவுகள் இறுக மூடிக்கொண்டன! ரைபர் ஆறும் ஜனிக்குலம் குன்றும் மௌனித்துப் போயின…! அரவணைக்கும் கரம்கொண்ட நீள் வட்ட வெளி முற்றம் என்னாயிற்று…! ‘என் ஆடுகளை மேய்’ எனும் போதனையும் எர்மோன் மலையடிவார வாசகமும் தொலைந்து போயின காண்…! பேதுருவே தொலைந்து போயின ...

Read More »

இந்தியாவில் இன்று நள்ளிரவு தொடக்கம் 21 நாள்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு தொடக்கம் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. அந்த உரையில், “அடுத்த 21 நாள்கள் ...

Read More »

இலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று (மார்ச் 24) செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 102பேர்) அதிகரித்துள்ளது. நாட்டில் கோரோனா ...

Read More »

கோரோனா நோயாளியின் உறவினர் பணியாற்றியதால் – கைதடி சந்தி, இலங்கை வங்கிக்கு 14 நாள் பூட்டு

யாழ்.கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், உறவினர் என அடையாளம் காணப் பட்டிருக்கும் நிலையில் இலங்கை வங்கி கிளை 14 நாட்கள் பூட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த பணியாளர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், குறித்த வங்கி கிளை அலுவலகத்தில் கிருமி நீக்கிகள் இன்று விசிறப்பட்டிருக்கின்றது.

Read More »

கொரோனா சந்தேகம் – சண்டிலிப்பாயில் தனிமைப்படுத்தப்படும் 214 சமுர்த்திப் பயளாளிகள்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் 214 சமுர்த்திப் பயனாளிகளை தனிமைப்படுத்துவது தொடர்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார். இன்று (24) நண்பகல் யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் க.மகேஸனை ஊடகவியலாளர்கள் சந்தித்திருந்தனர். அதன்போதே அவர் மேற்கண்ட தகவலை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், சுவிஸ் ...

Read More »

“சுவிஸ் மத போதகரை பொலிஸார் பாதுகாத்தனர் ” – வடக்கு ஆளுநர் பகீர் குற்றச்சாட்டு

அரியாலையில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தை நடத்திய, சுவிஸிலிருந்து வந்த மதபோதகரை பொலிசாரை பாதுகாத்தனர் என வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவித்து தடுப்பு ...

Read More »

மத போதகருடன் நெருங்கி பழகிய 17 பேர் பலாலி முகாமில் தங்கவைப்பு

சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த மதபோதகருடன் நேரடியாக தொடர்புகளை பேணிய 18 நபர்களில் 17 பேர் பலாலி இராணுவ முகாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் வவுனியா சென்றுவிட்டதால் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இத்தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் வெளியிட்டுள்ளார். இன்று நண்பகல் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ...

Read More »

“தாவடிக்கு சீல்” – உள்வர வெளிச்செல்லத் தடை

யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்பட்ட முதலாவது நோயாளி இனங்காணப்பட்ட நோயாளி தாவடி பகு தியை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் குறித்த பகுதி அதியுச்ச இராணுவ பாதுகாப்புக்குள் முடக் கப்பட்டிருக்கின்றது. குறித்த பகுதிக்குள் உள்நுழையவோ, வெளி செல்வதோ தடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாவடி சுதுமலை ஊடான போக்குவரத்தும் முற்றாக தடை செய்யப்பட்டிருக்கின்ற து. இன்று காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து ...

Read More »

யாழில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – தாவடியில் 300 குடும்பங்கள் வசிக்கும் பகுதி முற்றாக முடக்கம்

யாழ்.மாவட்டத்தில் 1729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா். 192 நபா்கள் அாியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டிருக்கின்றனா். 80 வீடுகள் தனிமைப்படு த்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  மேலும் யாழ்.தாவடி கிராமத்தில் சுமாா் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்கள் விழிப்புணா்வு ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறு நாங்கள் ...

Read More »

இலங்கையில் கொரோனா தொற்று 91 ஆக அதிகரிப்பு

நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு (2020.03.22) கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 04 ஆக பதிவானதுடன் இன்றைய தினத்தில் 5 நோயாளர்கள் (2020.03.23) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க COVID 19 ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com