தமிழின அழிப்பில் அதிகளவில் சிறுவர்களே இலக்குவைக்கப்பட்டார்கள்

ஈழத்தில் நடந்தேறிய இன அழிப்பு யுத்தத்தில் அதிகளவில் சிறுவர்களே இலக்குவைக்கப்பட்டதாக இறுதி யுத்தகளத்தில் புகைப்பட ஊடகவியலாளரைாக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசு குற்றஞ்சாட்டியுள்ளார். இது தமிழினத்தின் அடுத்த சந்ததியையும் இல்லாமல் செய்யும் நோக்குடன் சிங்கள அரசினால் மிகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் இன்னோர் வடிவம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆண்டு நினைவேந்தல் குறித்து சர்வதேச தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இத்தகவல்களை வெளியிட்டிருக்கிறார். தான் ஒரு புகைப்பட ஊடகவியலாளராக யுத்தகளத்தில் பணியாற்றியவன் என்ற அடிப்படையில் தனது கமராவின் கண்களால் கொல்லப்பட்ட அல்லது படுகாயமடைந்த அப்பாவிச் சிறுவர்களே படம்பிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 


ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசுவிடம் குறித்த ஊடகத்தால் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் வழங்கிய பதிலும் வருமாறு,


முள்ளிவாய்க்கால் இன அழிப்பைப் பற்றித் இன்று உலகம் இன்னும் அறியாத, ஆனால் அவசியமாக அறிய வேண்டிய ஒரு முக்கியமான உண்மை உங்கள் பார்வையில் ?


அறியாதது என்று இல்லை. எல்லாருக்கும் அது தெரிந்திருக்கிறது. இது இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று தான் ஆரம்பித்தது. உண்மையில் அது என்னுடைய பார்வையில் இது ஒரு இளைய தலைமுறையை இல்லாமல் அழித்தொழிக்கும் ஒரு மிகப்பெரிய ஒரு இன அழிப்புப் போர். சிறுவர்களுக்கு எதிராக, பலர் சிறுவர்களை படுகொலை செய்திருக்கிறது. இளைய தலைமுறையில் கனபேரை ஒரு சகாப்தத்திலேயே இல்லாம பண்ணி கிடக்கு. அதைவிட பலரை சின்னப்பிள்ளைகளிலேயே தாக்குதல்களில் கைகால்கள் இழந்துள்ளனர். அதேநேரம் 2010, 2011 காலப்பகுதியில் பிறந்த பிள்ளைகள் அங்கவீனமாக பிறந்திருக்கிறார்கள். இதுவும் இன அழிப்பின் இன்னொரு வடிவம் தான். இது இன அழிப்பு, இதை கருத்தில் எடுக்கிறார்களோ இல்லையோ தெரியது. ஆனால் இந்த போரில் நிறைய சிறுவர்கள்தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 















Post a Comment

أحدث أقدم