யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று(19) இடம்பெற்றது.
தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தேர்த்திருவிழாவை நேரில் கண்டு களித்தனர்.
அதன் போது ஆலய சூழல்களில் சனநெரிசல்களைப் பயன்படுத்தி திருடர்கள் தம் கைவரிசைகளைக் காட்டியுள்ளனர்.
பல பக்தர்களின் பெறுமதியான தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 35 பவுண் நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்னர்.
إرسال تعليق