யாழில் வெலிக்கடை படுகொலை நினைவேந்தல்


இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய,தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழில் இடம்பெற்றது. 

'வெலிக்கடை சிறைப் படுகொலை ' இடம்பெற்ற நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள்,  அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள், முன்னைநாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவ மற்றும் ஆசிரியர் சமூகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

أحدث أقدم