சற்று முன்
Home / செய்திகள் / Whats App Group இல் செய்திகள் பரிமாறிய இளைஞர்கள் மூவர் கைது

Whats App Group இல் செய்திகள் பரிமாறிய இளைஞர்கள் மூவர் கைது

“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” என்ற பெயரில் 100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கம பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 20, 23 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்தக் குழுவுடன் தொடர்புடைய மேலும் 25 பேர் இன்று அக்குழுவிலிருந்து உடனடியாக விலகியிருப்பதாகவும் காவற்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 3 வருடங்களாக இந்த வட்ஸ்அப் குழு செயற்படுத்தப்பட்டு வருவதுடன், இந்தக் குழுவை உருவாக்கியவர் பல வருடங்களாக வெளிநாட்டில் கடமையாற்றி நாடு திரும்பியவரென்றும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் 3 நாள்கள் தடுத்து வைத்து, விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com