சற்று முன்
Home / செய்திகள் / JSL யாழ் கிரிக்கெட் திருவிழா – நாளை கோலாகல ஆரம்பம்

JSL யாழ் கிரிக்கெட் திருவிழா – நாளை கோலாகல ஆரம்பம்

TCT மற்றும் SVM ஆதரவில் யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் JAFFNA SUPER LEAGUE 2019 மாபெரும் T20 கிரிக்கெட் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வு நாளை 12/01/2019 காலை 9.00 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது.

தொடர்ந்து நாளை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் B பிரிவு அணிகளான kokuvil Stars மற்றும் pannai Tilko Gladiators அணிகள் மோதும் முதலாவது போட்டியும் நண்பகல் 12 மணிக்கு B பிரிவு அணிகளான Velanai Vengaikal மற்றும் TelliyoorTitans அணிகள் மோதும் இரண்டாவது போட்டியும் நடைபெறவுள்ளன.

குறித்த சுற்றுப்போட்டியானது 8 அணிகள் பங்கு பெறும் 16 போட்டிகள் கொண்ட சுற்றுப்போட்டியாக நடைபெறவுள்ளது. B பிரிவு அணிகள் மோதும் முதல் சுற்றுப் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் 12, 13 மற்றும் 19 ஆம் திகதிகளிலும் A பிரிவு அணிகள் மோதும் முதல் சுற்றுப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் 19, 20 ஆம் திகதிகளிலும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்திலும் நடைபெறும்.

A பிரிவில் Velanai Vengaikal, pannai Tilko Gladiators, kokuvil Stars, TelliyoorTitans ஆகிய அணிகளும்
B பிரிவில் point petro super kings, Jaffna panthers, Ariyalai warriors, Nallur Broncos ஆகிய அணிகளும் மோதவுள்ளன.

எட்டு அணிகளையும் எட்டு உரிமையாளர்கள் ஏலம் மூலம் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com