சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / JSL துடுப்பாட்ட திருவிழா – முதல் வெற்றியை “கொக்குவில் ஸ்ரார்ஸ்” பதிவுசெய்தது

JSL துடுப்பாட்ட திருவிழா – முதல் வெற்றியை “கொக்குவில் ஸ்ரார்ஸ்” பதிவுசெய்தது

JSL சுற்றுத் தொடரில் முதலாவது ஆட்டத்தில் Pannai tilko gladiators அணியை எதிர்த்து kokuvil Stars அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற panni tilko gladiators களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலிலே துடுப்பெடுதாடிய kokuvil Stars அணியினர் 20 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு 4 இலக்கங்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் ஜனுதாஸ் 79 ஓட்டங்களையும் ஜான்சன் 66 ஓட்டங்களையும் அணித்தலைவர் வினோத் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் Pannai tilko gladiators அணி சார்பாக 4 பந்துப்பரிமாற்றங்களில் ரதீஷன் 28 ஓட்டங்களை விட்டு கொடுத்து 2 இலக்கங்களை சாய்த்தார் ஜனந்தன் மற்றும் சரத்குமார் தலா ஓவ்வொரு இலக்குகளை சாய்த்தனர்.

ஆட்ட நாயகன்

207 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுதாடிய pannai Tilko Gladiators அணியினர் 20 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 181 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர். ஒனசியர் 35 ஓட்டங்களையும் சரத்குமார் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
Kokuvil Stars அணி சார்பாக கிருஸ்ண தீபன் 4 பந்துப்பரிமாற்றங்களை வீசி 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளை சாய்த்தார். ஜான்சன் 2 பந்துப்பரிமாற்றங்களில் 19 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளை சாய்த்தார் இத்துடன் சுபேந்திரன் 3.5 பந்துப்பரிமாற்றங்களை வீசி 35 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளைச் சாய்த்தார்.

25 ஓட்டங்களால் kokuvil Stars அணியினர் வெற்றி பெற்றனர். முதலாவது போட்டியில் ஜான்சன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com