சற்று முன்
Home / விளையாட்டு / JSL துடுப்பாட்டத் தொடரின் ஐந்தாவது போட்டியில் தெல்லியூரை வீழ்த்தியது கொக்குவில் ஸ்ரார்

JSL துடுப்பாட்டத் தொடரின் ஐந்தாவது போட்டியில் தெல்லியூரை வீழ்த்தியது கொக்குவில் ஸ்ரார்

JSL சுற்றுத் தொடரில் நேற்று (19.01.2019) நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் தெல்லியூர் ரைரன்ஸ் அணியை எதிர்த்து மோதிய கொக்குவில் ஸ்ரார் அணி மூன்று இலக்குகளால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஸ்ரார் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலிலே துடுப்பெடுதாடிய தெல்லியூர் ரைரன்ஸ் அணியினர் 19 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு அனைத்து இலக்குகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் தெல்லியூர் ரைரன்ஸ் அணி சார்பாக துவாரகன் 31 ஓட்டங்களையும் துஷ்யந்தன் 26 ஓட்டங்களையும் பிரதீப் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் கொக்குவில் ஸ்ரார் அணி சார்பாக 04 பந்துப்பரிமாற்றங்களில் கிருஷ்ணதீபன் 26 ஓட்டங்களை விட்டு கொடுத்து 02 இலக்குகளைச் சாய்த்தார் வாமணன் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளை சாய்த்தார்.

141 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுதாடிய கொக்குவில் ஸ்ரார் அணியினர் 18.4 பந்து பரிமாற்றங்களில் 07 இலக்குகளையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். வாமனன் 42 ஓட்டங்களையும் கேதீஸ் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும். சுயன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தெல்லியூர் அணி சார்பாக கபில் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளை சாய்த்தார்.

சுஜாந்தன் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 02 இலக்குகளை சாய்த்தார். கொக்குவில் ஸ்ரார் 03 இலக்குகளால் வெற்றி பெற்றனர்.

நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் வாமணன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை தொடங்கவுள்ள டோனி.

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியிலுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com