சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / JSL துடுப்பாட்டத் திருவிழா ஆரம்ப நிகழ்வு

JSL துடுப்பாட்டத் திருவிழா ஆரம்ப நிகழ்வு

TCT மற்றும் SVM ஆதரவில் யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் JAFFNA SUPER LEAGUE 2019 மாபெரும் T20 கிரிக்கெட் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று 12/01/2019 காலை 9.00 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிவஞான வைரவர் நடைபெற்ற பூசை வழிபாடுகளையடுத்து வீரர்கள் மற்றும் விருந்தினர்கள் பான்ட் வாத்தியம் முழங்க மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலியும் நடைபெற்று துடுப்பாட்ட அணிகளின் கொடிகள் ஏற்றப்பட்டன. அதனையடுத்து யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கத் தலைவர் வி.மணிவண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து பிரதம விருந்திரராகக் கலந்துகொண்ட யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை வங்கியின் ஓய்வுபெற்ற முகாமையாளருமான லயன் எஸ்.விக்னராஜா போட்டியை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

அதனையடுத்து வீரர்கள் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து B பிரிவு அணிகளான kokuvil Stars மற்றும் pannai Tilko Gladiators அணிகள் மோதும் முதலாவது போட்டியும் பிற்பகல் 01.30 மணியளவில் B பிரிவு அணிகளான Velanai Vengaikal மற்றும் TelliyoorTitans அணிகள் மோதும் இரண்டாவது போட்டியும் நடைபெற்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com