சற்று முன்
Home / விளையாட்டு / #JSL துடுப்பாட்டத் திருவிழா – பண்ணையை வீழ்த்தியது தெல்லியூர்

#JSL துடுப்பாட்டத் திருவிழா – பண்ணையை வீழ்த்தியது தெல்லியூர்

ஆட்ட நாயகன் – கபிலன்

JSL சுற்றுத் தொடரில் நான்காவது ஆட்டத்தில் தெல்லியூர் ரைரன்ஸ் அணியினர் பண்ணை ரில்கோ கிளாடியர்ஸ் அணியை வீழ்த்தி இரண்டு இலக்குகளால் வெற்றிபெற்றுள்ளனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தெல்லியூர் ரைரன்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

முதலிலே துடுப்பெடுதாடிய பண்ணை ரில்கோ கிளாடியர்ஸ் அணியினர் 20 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு 09 இலக்குகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் பண்ணை ரில்கோ கிளாடியர்ஸ் அணி சார்பாக அனஸ்ராஜ் 29 ஓட்டங்களையும் தர்ஷிகன் 29 ஓட்டங்களையும் கௌதமன் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் தெல்லியூர் ரைரன்ஸ் அணி சார்பாக 04 பந்துப்பரிமாற்றங்களில் சுஜாந்தன் 32 ஓட்டங்களை விட்டு கொடுத்து 03 இலக்குகளைச் சாய்த்தார் கபிலன் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 02 இலக்குகளை சாய்த்தார்.

134 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுதாடிய தெல்லியூர் ரைரன்ஸ் அணியினர் 20 பந்து பரிமாற்றங்களில் 08 இலக்குகளையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். அஜீத் 27 ஓட்டங்களையும் கஜீபராஜ் 22 ஓட்டங்களையும் கபிலன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பண்ணை ரில்கோ கிளாடியர்ஸ் அணி சார்பாக அனஸ்ராஜ் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 15 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 03 இலக்குகளை சாய்த்தார்.

மதன் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 03 இலக்குகளை சாய்த்தார். இதன் மூலம் தெல்லியூர் ரைரன்ஸ் 02 இலக்குகளால் வெற்றி பெற்றனர்.

நடைபெற்ற நான்காவது போட்டியில் சிறப்பாகச் செயற்பட்ட கபிலன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை தொடங்கவுள்ள டோனி.

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியிலுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com