சற்று முன்
Home / விளையாட்டு / JSL சுற்றுத் தொடரில் நல்லூர் பிறவுண்சை 6 இலக்குளால் தோற்கடித்தது யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணி

JSL சுற்றுத் தொடரில் நல்லூர் பிறவுண்சை 6 இலக்குளால் தோற்கடித்தது யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணி

JSL சுற்றுத் தொடரில் நேற்று (19.01.2019) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணியை எதிர்த்து நல்லூர் பிறவுண்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலிலே துடுப்பெடுதாடிய நல்லூர் பிறவுண்ஸ் அணியினர் 20 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு அனைத்து இலக்குகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் நல்லூர் பிறவுண்ஸ் அணி சார்பாக பிரபவன் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஜேம்ஸ் 22 ஓட்டங்களையும் பிரியலக்ஷன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணி சார்பாக 03 பந்துப்பரிமாற்றங்களில் அனுரதன் 22 ஓட்டங்களை விட்டு கொடுத்து 03 இலக்குகளையும் டார்வின் 03 பந்துப்பரிமாற்றங்களை வீசி 07 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளையும் சாய்த்தனர்.

125 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுதாடிய யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணியினர் 16.2 பந்து பரிமாற்றங்களில் 04 இலக்குகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். மோகன்ராஜ் 56 ஓட்டங்களையும் அணித்தலைவர் அருன்ராஜ் 33 ஓட்டங்களையும். பெற்றுக்கொண்டனர்.

நல்லூர் பிறவுண்ஸ் அணி சார்பாக பிரபவன் 04 பந்துப்பரிமாற்றங்களை வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 02 இலக்குகளையும் சிவராஜ் 1.2பந்துப்பரிமாற்றங்களை வீசி 09 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 01 இலக்குகளையும் சாய்த்தனர்.

யாழ்ப்பாணச் சிறுத்தைகள் 06 இலக்குகளால் வெற்றி பெற்றனர் நடைபெற்ற ஏழாவது போட்டியில் மோகன்ராஜ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை தொடங்கவுள்ள டோனி.

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியிலுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com