சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 451)

முக்கிய செய்திகள்

மக்களுக்கு சுமையான வரி விதிப்பினை மேற்கொள்ளப்போவதில்லை

சாதாரண பொது மக்களுக்கு சுமையாக அமையும் எந்தவொரு வரி விதிப்பும் மேற்கொள்ளப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். வற் வரி திருத்தத்திற்கு அரசு தயாராவதாக அண்மையில் ஒருசில ஊடகங்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஏழை பொது மக்களுக்கு இன்னல் தரும் எந்தவிதமான வரி அதிகரிப்பிற்கும் தான் இடமளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்தார். அவ்வாறான ...

Read More »

எதிர்க்கட்சித் தலைவர் எமது கருத்துக்களை ஆர்வத்துடன் செவிமடுக்கவில்லை

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு சிறைச்சாலை திறப்பு தன்னிடம் இல்லை எனத்தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தம்முடனான கலந்துரையாடலில் ஆர்வமற்ற நிலையில் ஏனோதானோ என்ற போர்வையிலேயே பங்குபற்றியதாக தமிழ் அரசியற் கைதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தம்முடனான கலந்துரையாடலின் முழுநேரத்தையும் பத்திரிகை வாசிப்பதிலேயை அவர் செலவிட்டதாகவும் இடையிடையே தமது கருத்துக்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை அரசியல் கைதிகள் ...

Read More »

மீண்டும் வெடிக்கும் – மாவை எம்.பி

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக இலங்கை அரசிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா. மக்களது காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே, மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில், மீண்டும் காணி ...

Read More »

பொலிஸ் பாதுகாப்பு தாருங்கள் – யாழ் அரசாங்க அதிபர் வேண்டுகோள்

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அத்தியட்சகருக்கு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்திற்கும் கடமை நேரங்களில் அரச அதிபரின் அலுவலகத்திற்கும் நிரந்தரமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடமை நேரங்களில் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது அரச ...

Read More »

நல்லுறவை கட்டியெழுப்ப சகலரும் முன்வர வேண்டும்

சிதைந்து போயுள்ள சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்ப சகலரும் முன்வர வேண்டுமென சித்திரைப் புத்தாண்டில் தான் அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் சிங்கள மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மலர்ந்திருக்கும் இந்த இனிய ...

Read More »

தேசிய நல்லிணக்கத்துக்கு வலுவூட்டுகின்ற தமிழ், சிங்கள புத்தாண்டு

“தமிழ் சிங்களப்புத்தாண்டு தேசிய நல்லிணக்கத்துக்கு வலுவூட்டுகின்ற ஒரு முக்கிய பண்டிகையாகும். இந்தவேளையில் ஒரே தேசம்,ஒரே மக்கள் என்ற ரீதியில் தேசத்தைக்கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதியுடன் செயற்படப் பிரார்த்திப்பதாக”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: இலங்கைவாழ் இந்துக்களினதும், சிங்கள பௌத்தர்களினதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் ...

Read More »

புதிய அபிலாஷைகள், மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பிப்போம்

புதிய அபிலாஷைகள், மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளக் கிடைக்கும் சிறப்பான சந்தர்ப்பமாக இதனை ஏற்றுக் கொள்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இன்று(14) அனைத்து சிங்கள, தமிழ் மக்களாலும் வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு வௌியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

Read More »

முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறக்க போகின்ற துர்முகி வருடத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு , தமிழ் மக்கள் சுமூகமான வாழ்வை வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் என தான் பிரார்த்திப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு, வடமாகாண முதலமைச்சரினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் ...

Read More »

ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல் முயற்சி.

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இராணுவத்தினர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, அவரது புகைப்பட கருவியையும் சேதமாக்கியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று செவ்வாய்கிழமை இரவு 9.45 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில்  குடமுருட்டி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ...

Read More »

அரசியலமைப்பு தொடர்பிலான வடமாகாண சபையின் அமர்வு ஒத்திவைப்பு .

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைவு தொடர்பிலான விசேட  மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 49ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இன்றைய அமர்வில் அரசியலமைப்பு திருத்தத்திற்காக வடமாகாண சபையினால் முன் வைக்கப்படவுள்ள தீர்வு திட்டம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com