சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 450)

முக்கிய செய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (25) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பதில் உள்ள விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேற்படி சீமெந்து ...

Read More »

இவர்களின் தீர்மானத்தை கருத்தில் கொள்ளத் தேவையி்ல்லை – வடக்கு ஆளுநர்

வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஜனநாயக சூழல் பலமடைந்துள்ளதால் ஒவ்வொரு அரசியல் வாதிகளுக்கு தத்தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும்  உரிமை காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் எனினும் இவ்வாறான கருத்துக்கள் தீர்மானங்கள் குறித்து தாம் பெரிதாக ...

Read More »

வடமாகாணசபை பிரிவினைவாதத்தை தூண்டவில்லை – சி.வி.கே

வடமாகாணசபை பிரிவினைவாதத்தை தூண்டவில்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வடக்கு கிழக்குமாகாணங்களில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர். எனவே வடக்கு கிழக்கை மீள இணைப்பதில் பிரச்சினை கிடையாது.  எனத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்து சமஸ்டி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ள அவர் சமஸ்டி ...

Read More »

முஸ்லீகளுக்கு தனி நிர்வாக மாவட்டம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

இலங்கையில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் மக்களுக்கான தனி நிர்வாக மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியுள்ளது. அப்படியான ஒரு நிர்வாக மாவட்டம் தற்போது நாட்டில் இருக்கும் 25 நிர்வாக மாவட்டங்களுக்கு அப்பாற்பட்டு 26-ஆவதாகவோ அல்லது தென்கிழக்கு கரையோரம் தனியான நிர்வாக மாவட்டமாகவோ இருக்கலாம் என்று அக்கட்சியின் ...

Read More »

விக்னேஸ்வரனை கைது செய்யக் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல

அரசியலமைப்பு தீர்வுத் திட்டம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தாக்கி பேசுவதும், கைதுசெய்ய வலியுறுத்துவதும் தேவையற்ற விடயம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி. கே. சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 50வது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடமாகாண சபையின் அரசியலமைப்பின் தீர்வு திட்டத்தில் மாற்றத்தினை மேற்கொள்ளவதற்கான ஆலோசனைகளைப் பெறும் போதே இவ்வாறு ...

Read More »

தமிழ்-சிங்கள விவசாயிகள் மோதல் – மூதூரில் பல மணி நேரம் பதட்டம்

காணிப் பிணக்குகள் காரணமாக தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மூதூர் பிரதேசத்தில் இன்று (21) பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனாபோதிலும் கிழக்கு மாகாணத்தில் காணி உரிமைகள் தொடர்பான இழுபறிகள் இன்னும் பெரிய பிரச்சனையாகவே உள்ளததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டம் ...

Read More »

‘இதுவே என் கடைசி உரையாக இருக்கலாம்’ – ஃபிடல் காஸ்ட்ரோ உணர்ச்சிகர பேச்சு

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்” என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக ...

Read More »

வெட்கித் தலைகுனிவோம் – யாழில் 3 ஊடகவியலாளர்கள் பணி விலகல்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு யாழ் ஊடகமொன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தவறானது என சுமந்திரன் எம்.பி யினால் கொடுக்கப்பட்ட மறுப்பினை வெளியிட்டமை தொடர்பில் இரா.சம்பந்தன் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரும் அவரிற்கு ஆதரவாக இரு ஊடகவியலாளர்களும் தமது பணியினை இராஜினாமாச் செய்துள்ளதாக ...

Read More »

ரவிராஜ் வழக்கு – சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரிக்க சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இதன்படி இவர்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இவ்வாறு காவலில் வைக்க அனுமதிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் இதற்கு பிரதிவாதிகள் தரப்பு ...

Read More »

விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் கொழும்பில் கைது

இன்றைய தினம் (19) விசாரணைக்காக கொழும்பு 2 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட முல்லைத்தீவு ஜீவநகரை சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் (36 வயது) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com