சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 449)

முக்கிய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பேரணி

இணுவில் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான மேதின பேரணி  காங்கேசன்துறை வீதி ஊடாக மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது. சில நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற இவ் மேதின கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்இ தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாஇ நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்இ ஈ.சரவணபவன் சார்ள்ஸ் ...

Read More »

கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணி

ஞாயிற்றுக் கிழமை (01.05.2016) கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த மேதினப் பேரணியில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு கூட்டுறவு ...

Read More »

பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள ...

Read More »

சிவகரன் பிணையில் விடுதலை

வழக்கு முடிவடையும் வரையில் வெளிநாடு செல்ல முடியாது என்ற நிபந்தனையுடன் ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். மன்னார் பகுதியில் நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சிவகரன் வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் ...

Read More »

ஒரு மாத காலத்துள் வட-கிழக்கில் 10 பேர் கைது 2 பேர் கடத்தல்

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் கடந்த ஒரு மாத காலப்பகுதியி்ல் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகள் மூவரும் தமிழரசுக் கட்சியிய் இளைஞரணிச் செயலரும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறாக ஒருமாதகாலப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட கைதுகள் தொடர்பில் தம்மிடம் ஆறு  முறைப்பாடு பதிவு செயப்பட்டுள்ளதாக ...

Read More »

பொன்காந்தனுக்கு அடைக்கலநாதன் அடைக்கலம்

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட துணைத்தலைவர் பொன் காந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடனான முரண்பாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில் தமிழரசுக் கட்சியின் பங்களிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவர்களுள் ஒருவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின்  பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனினால்  கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக  இன்று புதன்கிழமை (27) நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான ...

Read More »

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் கைது

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் புதியவன் வார இதழின் ஆசிரியருமான வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை மதியம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் துண்டு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த ...

Read More »

புலிகளின் முன்னாள் தளபதிகள் ராம் – நகுலன் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பில், முன்னர் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த  ராம் (எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன்) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் (24) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த  நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் இன்று (26)  நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து ...

Read More »

சமஷ்டியை வலியுறுத்தி வெளிநாடுகள் அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – சி.வி.

தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் சமஸ்டி என்றால் நாட்டைப் பிரிப்பதாகும் என்று நீண்ட காலமாகப் பிரசாரம் செய்து வந்துள்ளதனால் நிலைமை மோசமாகியுள்ளதாகவும், அதனைப் போக்குவதற்கு வெளிநாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கோரியிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார். சமஷ்டி வழியிலான தீர்வினை தென்னிலங்கை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பலதரப்பட்டவர்களுடன் ...

Read More »

“சமஷ்டி” ஆட்சி பற்றி பேசக்கூட தயாரில்லை -சுதந்திரக் கட்சி

இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சி முறை பற்றி பேச்சு நடத்தக்கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. ‘ஃபெடரல் ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அதனால், நாம் வென்றெடுத்துள்ள அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்திரமற்ற நிலைக்குத் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com