சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 448)

முக்கிய செய்திகள்

கட்டிப்புரண்ட சண்டைக்கு நடுவில் எதிர்க்கட்சித் தலைவர் தப்பிச்சென்றது எப்படி ? – காணொளி

  அண்மையில் பாராளுமன்றத்தில் கைகலப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மெதுவாய் எழுந்து திரும்பி திரும்பி பார்த்தவாறு வெளியேசெல்வதும் பின்னர்  சபையின் பின்பகுதியிலிருந்து உள்ளே வரும்போது கைகலப்பு உச்சகட்டத்தை எட்டியபோது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அருகே வந்து ஏதோ கூறிவிட்டு தனது இருக்கை அருகே வந்து எடுத்துக்கொண்டு சுமந்திரன் எம்பியின் வழிகாட்டுதலோடு பின் கதவு வழியாக வெளியேறிச் ...

Read More »

தனி ஈழம் எய்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் – ஜெயலலிதா

இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வெளியிட்டார். அவர் வெளியிட்டு வைத்த தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது என்று த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் ...

Read More »

பாராளுமன்ற கௌரவத்தைப் பாதுகாப்பது உறுப்பினர்களினதும் பொறுப்பாகும்!

மேன்மைப்பொருந்திய பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஒரு முழுமையான மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு ஒழுக்கமும் முதிர்ச்சியுமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேன்மை பொருந்திய பாராளுமன்றத்திற்கு மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள ...

Read More »

பிரசன்ன, பாலித்தவுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஒரு வாரம் தடை

பிரசன்ன ரணவீர மற்றும் பாலித்த தேவரப்பெரும ஆகியோரது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு தடை செய்ய, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கூடிய சபையில் சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, நாளை முதல் ஒரு வார காலத்துக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் குறித்த இருவரும் ஈடுபட முடியாது. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே இந்த ...

Read More »

10 அமைப்புகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்னும் புதிய கட்சி உதயம்!

புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சரியாக அணுகப்படவில்லை என்பதுடன் அதனை சரியாக அணுகுவதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் ஜனநாயக தன்மையுடைய மாற்று தலைமைத்துவத்தை வழங்குவதற்காகவே புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என புதிதாக தமிழ் மக்கள் மத்தியில் உதயமாகியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. 10 தமிழ் ...

Read More »

களோபரமானது பாராளுமன்றம் – ஐ.தே.க எம்.பி காயம் – கட்டிப்புரண்டு மோதல்

இலங்கை நாடாளுமன்றதில் இன்று நடந்த கைகலப்பில் உறுப்பினர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது கருத்தை தெரிவித்துக்கொண்டிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலாப்பாக மாறியது. இதன்போது தாக்குதலுக்குள்ளான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read More »

சுன்னாகம் நீர் குடிப்பதற்கு அல்ல !

சுண்ணாகம் நிலத்தடி நீரில் எம்மால் நியமிக்கப்பட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குழுவின் ஆய்வின்படி எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது. எனவே அந்த நீர்குடிப்பதற்கு உகந்தது அல்ல. எனினும் வடக்கு மாகாண சபையின் குழுவின் ஆய்வின்படி அவ்வாறு எண்ணெய் கசிவுகள் நீரில் கலக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு குழப்பகரமான நிலைமை எனவே இது தொடர்பில் மேலதிகமாக ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுக்கிறதா ?

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஞாயிறன்று நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா சம்பந்தன் நாமெல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்துச் செயற்படவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் என தனது உரையின் இடையிடையே கூறிக்கொண்டிருந்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சிகள் யாவும் இந்த மேதின நிகழ்வைப் புறக்கணித்திருந்த நிலையில் சம்பந்தனது உரையில் ஒற்றுமை ...

Read More »

புலிகளின் முன்னாள் மட்டு. புலனாய்வுப் பொறுப்பாளர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் என்பவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார், தனது ...

Read More »

பங்களிக் கட்சிகள் புறக்கணிப்பு – தமிழரசுக் கட்சி தனித்து மேதினம்

பங்காளிக் கட்சிகள் யாவும் புறக்கணித்திருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின வைபவம் தனித்து தமிழரசுக் கட்சியின் மேதினக் நிகழ்வாக மருதனார்மடத்தில் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக் கட்சியின் ஏனைய பங்களிக் கட்சிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com