சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 440)

முக்கிய செய்திகள்

கடன் சுமையில் நாடு ! மக்கள் மீது வரி ! அமைச்சர்களுக்கு சொகுசு வாகன இறக்குமதி அவசியமா?

அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கான ரூபா செலவில் வாகனங்கள் கொள்வனவு செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள்  பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மநாடு இதனால் சர்ச்சைக்களமாக மாறியது. அதன்போது பதிலளித்த  அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களான அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக்க ஆகியோர் அதிக விலையில் கார் கொள்வனவு செய்ய தீர்மானம் எடுத்துள்ளமை தொடர்பிலும் ...

Read More »

வேலூரில் அனுமதி மறுப்பு… ஏழு பேர் விடுதலைக்கான பேரணி இடமாற்றம்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக நாளை (11-ம் தேதி) வேலூரில் இருந்து நடைபெறுவதாக இருந்த பேரணி சென்னையில் நடைபெறும் என அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்ற நிலையில் அவர்களை விடுதலை செய்யக் ...

Read More »

சொகுசுமாளிகையில் வாழ்ந்துகொண்டு மக்களுக்கு சேவை வழங்க முடியாது – ஜனாதிபதி மைத்திரி

சாதாரண பொதுமக்களை பிரிந்து சொகுசு மாளிகையில் வாழந்து கொண்டு மக்களுக்கு உரிமையான சேவையினை செய்ய இயலாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா ஆகியவற்றினை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பார்வையிடும் வாய்ப்பு நேற்றிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விழாவில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாடசாலை ...

Read More »

தகவல் அறியும் சட்டமூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும் – ஊடக அமைச்சர்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற்று நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு ...

Read More »

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான பிரேரணை தோல்வி

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. குறித்த, பிரேரணைக்கு எதிராக 145 வாக்குகளும், ஆதரவாக 51 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்தப் பிரேரணை ...

Read More »

வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிற்கு விளக்க மறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை முற்படுத்திய வேளையிலையே அவர்கள் இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். கடந்த ...

Read More »

பஷிலின் முன்பிணை மனு நிராகரிப்பு

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்திருந்த நிலையில் தன் மீதான கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு முன்பிணை கோரி தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. கறுப்புப் பண குற்றச்சாட்டின் கீழ் கடந்த 06 ஆம் திகதி ...

Read More »

ஒலிவாங்கி பழுதானதால் தப்பித்தார் ரவி கருணாநாயக்க !

பாராளுமன்றத்தின் ஒலிவாங்கித் தொகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பாராளுமன்றம் நாளை (09) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய தினம் (08) இடம்பெறவிருந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஆகியன ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில், ஒலிவாங்கித் தொகுதியில் ஏற்பட்ட கோளாறு ...

Read More »

நல்லாட்சி தமிழர்க்கு என்ன செய்தது ? இதுவரை ! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மக்களின் காணிகளைப் பிடிப்பதையும் பௌத்த தூபிகள் சிலைகள் அமைப்பதையும் தவிர நல்லாட்சி அரசு எனக் கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிற்கு என்ன செய்தது? எனக் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைருமான  சுரேஸ் பிரேமச்சந்திரன் சம்பூரில் 1000 ஹெக்ரயர் காணியினை விடுவித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக ...

Read More »

கிழக்கு முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

கடற்படை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதன் மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசிர் அஹமத் இலங்கை அரசியல் யாப்பை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி. லியனாராச்சி மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். இதில், பிரதிவாதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அண்மையில், சம்பூர் பகுதியில் இடம்பெற்ற அரச ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com