சற்று முன்
Home / Author Archives: Sujitha Thurairajan

Author Archives: Sujitha Thurairajan

கோத்தாவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை !

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அது குறித்து கவலையில்லை.ஆனால் அவர் கொலையுடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடாது.  கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா நியமிக்கப்பட்டால் ஆதரவு வழங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.  தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது : என்னுடைய தற்போதைய நிலைப்பாடு கடந்த 30 ...

Read More »

அப்புத்தளை ஆலயம் ஒன்றில் சிலைகள் திருட்டு!

அப்புத்தளைப் பகுதியின் பெரகலை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் பெறுமதிமிக்க இரு சுவாமி சிலைகள் திருடப்பட்டிருப்பதாக அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பாலமூர்த்தீஸ்வரக் குருக்கள் இரு சுவாமி சிலைகள் திருட்டுக் குறித்து அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தேவஸ்தானத்தின் வழிப்பிள்ளையார் சிலை மற்றும் சந்தன ...

Read More »

சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை இழக்க நேரிடும் -ஜேர்மன் எச்சரிக்கை!

மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக்கூடிய அங்கீககாரத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஜேர்மனி எச்சரித்திருக்கிறது. போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு விரைவில் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமையை அடுத்து, இதுகுறித்து சர்வதேச நாடுகள் பலவும் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன.  ஜேர்மனியின் ...

Read More »

பதுளை நமுனுகல வைத்தியசாலைக்கு வைத்தியர் இன்மையால் மக்கள் பாதிப்பு!

பதுளை பகுதியின் நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலையில் நிரந்தரமாக சேவையாற்றக்கூடிய வைத்தியர் ஒருவரை ஈடுபடுத்தும்படி  ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்  வைத்தியர் ஜே. சி. எம். தென்னக்கோன் மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அக்கடிதத்தில் “பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார்,  நமுனுகல கிராமிய அரச ...

Read More »

இரணைமடு அனா்த்தம் ஆய்வு அறிக்கையை வெளியிடவேண்டும்!

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீா்மட்டம் உயா்வினால் கடந்த ஆண்டு உண்டான அனா்த்தம் குறித்த ஆய்வு அறிக்கையினை ஒரு வாரத்திற்குள் வெளியிடுவேன் என கூறிய ஆளுநா் சுரேன் ராகவன், அதனை வெளியிடாமல் மறைத்து வைத்துக் கொண்டு ஊழல் செய்த அதிகாாிகளை தண்டிப்பேன் என கூறுவது வேடிக்கை. மக்கள் முன்னேற்ற கூட்டணியின் தலைவா் கணேஷ் வேலாயுதம் கேள்வி எழுப்பியிருக்கின்றாா். ...

Read More »

குடிவரவு- குடியகல்வு புதிய பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின்  புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பசன் ரத்னாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2017ஆம் ஆண்டிலிருந்து குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின்  மேலதிக பணிப்பாளராகக் கடமையாற்றிய  இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார். இதற்கு முன்னர் மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மத்திய மாகாண கலாசார அலுவல்கள் பணிப்பாளர், ...

Read More »

வவுனியாவில் அகற்றப்பட்ட இராணுவத்தினரின் சோதனை சாவடி!

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தானை வீதியில் இரானுவத்தினரால் இவ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கடும் சோதனைக்குட்படுத்தி வந்தனர். நாட்டில் தற்போது நிலவும் சீரான நிலமையினையடுத்து ...

Read More »

யாழில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றை உரிமையாளர் துப்புரவு செய்யும்போது அதிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.  யாழ்ப்பாணம் புங்கன்குளம் புறூடி வீதிப் பகுதியில் உள்ள வெற்றுக்காணியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. வெடிபொருட்களை அவதானித்த குறித்த  காணியின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில், வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் குறி்த்த சமப்வம் ...

Read More »

குருணாகல் வைத்தியர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லையாம்!

குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சி.ஐ.டி.யினர் இன்று நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.  வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த ...

Read More »

சிறிலங்கா இராணுவ முகாமில் பாலியல் அடிமைப் பெண்!அதிர்ச்சி !

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில்  வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணியொருவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com