சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாவட்டச் செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என எழுத்தில் அறிவித்தோம்

யாழ் மாவட்டச் செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என எழுத்தில் அறிவித்தோம்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் நடாத்த முடியாது என பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எழுத்தில் வழங்கிய பின்பும் அதனை மீறியே இன்றைய கூட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர எல்லைப் பகுதிக்குள் கலியாண மண்டபங்கள் , உணவகங்கள் , பேரூந்துகளிற்கு மட்டும் கட்டுப்பாடு விதித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் , அரசியல்வாதிகள் 200ற்கும் மேற்பட்டோர் மாவட்டச் செயலகத்தில் ஒன்றுகூடும்போது சுகாதார வைத்திய அதிகாரிகள் உறக்கத்தில் இருக்கிறார்களா என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அது தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே யாழ் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் வைத்திய அதிகாரி மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் இதனை நடாத்த முடியாது என்பது உண்மை அதற்கான வழிகாட்டலை சுகாதாரத் திணைக்களத்திற்கும் தெரிவித்து மாவட்டச் செயலாளருக்கும் எழுத்தில் அறிவித்தேன். இத்தனை பணிகளையும் மீறி கூட்டம் இடம்பெற்றது மட்டுமன்றி எமக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவற்றின் அடிப்படையில் எனது அதிகார எல்லைக்குள் நான் ஆற்றவேண்டிய பணியை ஆற்றினேன். எனப் பதிலளித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு

இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com