சற்று முன்
Home / கட்டுரைகள் (page 10)

கட்டுரைகள்

இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்பதும்தான்

இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது துக்கம் அனுஸ்டிப்பது மட்டுமல்ல அந்த கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் கோபத்தையும் ஆக்க சக்தியாக மாற்றுவதும்தான். அதை இவ்வாறு ஓர் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதென்றால் அந்தத் துக்கம் அல்லது இழப்பு ஏன் ஏற்பட்டது என்பதிலிருந்தும் அதை ஏன் தடுக்க முடியவில்லை என்பதிலிருந்தும் படிப்பினைகளைப் பெறுவதுதான். அதன் மூலம்தான் அவ்வாறான துக்கம் ...

Read More »

போருக்குப் பின்னான ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் – ந.மயூரரூபன்

ஈழத்தில் நடைபெற்ற போர், ஈழத்துத் தமிழர்களது வாழ்வில் பெரும் வடுவாக அமைந்துவிட்டுள்ளது. தமிழர்களின் சமூக இருப்பென்பது இருவகையான அரசியல் அதிகாரங்களினால் கட்டுண்டது. முரணான இரு கட்டுக்குள் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இரு வகை அரசியலைப் பேசினார்கள். ஒவ்வொரு வகையான நம்பிக்கைகளை தங்களுக்குள் கட்டியமைத்தார்கள். தமிழ் தேசியம் தொடர்பானதும், தங்களதும் தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் ...

Read More »

நீங்கள் IMO பாவிப்பவரா? அப்படியாயின் இதனை கட்டாயம் படியுங்கள். ..

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.   சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது.  போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது. கடந்த சில ...

Read More »

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல – நிலாந்தன்

மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனு~;டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை காவல்துறை தடை ...

Read More »

முல்லை ஆக்கிரமிப்புக்கு அரசின் பதில் என்ன? – நிருபா குணசேகரலிங்கம்

நாட்­டி­லேயே அதிக வறுமை கார­ண­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள முல்­லைத்­தீவு மாவட்டம், இன்றும் தொடர் சிக்­கல்­க­ளையே சந்­தித்து நிற்­கின்­றது. இரா­ணு­வத்­தி­னரால் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டுதல், வெளி­மா­வட்ட கடற்­றொ­ழி­லா­ளர்­களின் அத்­து­மீ­றல்கள், இன விகி­தா­சா­ரத்­தினைப் பாதிக்கும் வகை­யி­லான குடி­யேற்­றங்கள் என மக்­களைப் பாதிக்கும் விட­யங்கள் அங்கு நீண்டு கொண்டே செல்­கின்­றன. படை­யி­ன­ருக்­காக காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டுதல் இவ்­வாரம் முல்­லைத்­தீவு மக்­களை அச்­சு­றுத்தும் மற்­றுமோர் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. ...

Read More »

சம்பந்தரின் வழி? – நிலாந்தன்

அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ் குணவர்த்தன வழமை போல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோல தன் கையில் இருந்த சிறிய டப்பாவுக்குள் இருந்து பாதாம் பருப்புக்களை வாயில் போட்டு மென்று கொண்டிருந்திருக்கிறார். தேர்தல் காலங்களிலும் அவர் இவ்வாறு பாதாம் பருப்பை மெல்வதை பலரும் கண்டிருக்கிறார்கள். மூளையை ...

Read More »

புத்தரின் கண்ணீர் – சித்தாந்தன் (சிறுகதை)

சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டுஅமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின்இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள்ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது.பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது.அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.துயரமும், அவமானமும் அவனது இதயத்தைப் பிளந்தன. ...

Read More »

தேசிய பாதுகாப்பிற்கு இல்லை. நல்லிணக்கத்திற்கே அச்சுறுத்தல் ! நிருபா குணசேகரலிங்கம்

ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் மீது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரமும் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அவரது தற்போதைய குற்றச்சாட்டுக்களில், நாட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதனால் ஆயுதப்பாவனை தலைதூக்கியுள்ளது. அதனைப் புரியாது நடைமுறையில் உள்ள அரசாங்கம் செயற்படுகின்றது என்று தெரிவித்து வருகின்றார். அத்துடன், வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ...

Read More »

நிபந்தனையற்ற கூட்டணியமைக்க கட்சிகளுக்கு ஸ்டாலின் பகிரங்க அழைப்பு!

கொளுத்தும் வெயிலில், மக்களும் தொண்டர்களும் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்துக் கொண்டிருப்பார்கள். ஏ.சி. வேனில் அமர்ந்துவரும் தலைவர்கள், வெயிலில் வாடும் மக்களிடம் ஓட்டு கேட்பார்கள். இதுதான், கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத் தேர்தல் பிரசார யுக்தி. மு.க.ஸ்டாலினின், ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணம் அதை மாற்றியிருக்கிறது. நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகளை அவர்களின் இடத்துக்கே நேரடியாகச் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com