சற்று முன்
Home / செய்திகள் / 94 மில்லியன் பெறுமதியான இயந்திரங்கள் கடத்தல் – அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்ய உத்தரவு

94 மில்லியன் பெறுமதியான இயந்திரங்கள் கடத்தல் – அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்ய உத்தரவு

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களை உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனையப் பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற விதத்தில் தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே, இராஜாங்க அமைச்சரையும் அவரது மகனையும் கைதுசெய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“லங்கா பில்டர்ஸ் கோப்பரேடிவ் சொஸையிட்டி” நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபர் ஊடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com