சற்று முன்
Home / செய்திகள் / 9 ஆயிரம் வெற்றிடம் – வடக்கில் இருந்து 194 பேரே விண்ணப்பித்தனர் !

9 ஆயிரம் வெற்றிடம் – வடக்கில் இருந்து 194 பேரே விண்ணப்பித்தனர் !

இலங்கை முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களிற்கு நிலவும் வெற்றிடத்திற்கு போதிய விண்ணப்பங்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து கிடைக்காது மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே விண்ணப்பித்ததாக கூறப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பத் திகதி மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள மருத்துவ மனைகளில் நிலவும் தாதிய உத்தியோகத்தர்களிற்கான வெற்றிடம் மற்றும் உதவி மருத்துவ பணியாளர்களை நிரப்பும் நோக்கில் தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 9 ஆயிரம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலும் . அதிகம் வேலையில்லாப் பிரச்சணையைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் பல்லாயிரக் கணக்கானோர் வேலை வாய்ப்பின்றி உள்ள நிலையில் வடக்கில் இருந்து 194 பேர் மட்டுமே கடந்த 15ம் திகதிவரை விண்ணப்பித்திருந்தனர்.

இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையோர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக மாவட்டச் செயலாளரே கூறும் நிலையில் சுகாதார அமைச்சிற்கு கிடைக்கப்பெற்ற 9 ஆயிரம் விண்ணப்பங்களில் 194 விண்ணப்பங்கள் மட்டுமே வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளினது. எனவும் சுட்டிக்காட்டப்பட்டது . இதனையடுத்து குறித்த விபரம் பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் விகிதம் அதிகரிக்கப்பட்டு நேற்றுவரையில் 309 விண்ணப்பங்கள் வடக்கில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவதோடு நேரலை ( ஒன்லைன் ) விண்ணப்பம் என்பதனால் அதனை விண்ணப்பிக்கும் வகையில் ஏதாவது இடர்களை எதிர்பொள்பவர்களிற்கு மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்களங்களே படிவங்களை நேரடியாக பூரணப்படுத்தி அனுப்பியும் உதவிபுரிகின்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com