சற்று முன்
Home / செய்திகள் / 60 : 20 : 20 என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொகுதி உடன்பாடு

60 : 20 : 20 என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொகுதி உடன்பாடு

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தவி­சா­ளர் பதவி பெறும் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சிக்கு அந்­தச் சபை­யில் 60 வீத­மான வேட்­பா­ளர்­களை நிய­மிப்­பது என்­றும் ஏனைய இரு கட்­சி­க­ளும் எஞ்­சிய 40 வீதத்­தை 20 : 20 எனப் பங்­கி­டு­வ­தும் என்­றும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்­பான ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டு­வ­து என்­றும் மூன்று கட்­சி­க­ளும் உடன்­பட்­டன.தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் நேற்று கூடின. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில் அது தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­டின. அதில் 60:20:20 என்ற இணக்­க­பாடு எட்­டப்­பட்­டது.

தேர்­த­லில் வென்ற பின்­னரே தவி­சா­ள­ரைத் தீர்­மா­னிப்­பது என்­று முடி­வெ­டுக்­கப்­பட்­டது.தவி­சா­ளர் நிறுத்­தப்­ப­டும் கட்சி சார்­பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­றும் வேட்­பா­ளர்­க­ளின் சத­வீ­தம் 60 ஆகக் இல்­லா­விட்­டால் விகி­தா­சார அடிப்­ப­டை­யில் கிடைக்­கும் நிய­மன ஆச­னங்­களைத் தவி­சா­ளர் தெரி­வா­கும் கட்­சிக்கு வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

தவி­சா­ளர் ஒரு கட்­சிக்கு வழங்­கப்­பட்­டால் மற்­றைய கட்­சிக்கு உப தவி­சா­ளர் பதவி வழங்­கப்­ப­டும். ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் வெற்­றிக்கு மூன்று கட்­சி­க­ளுமே இணைந்து பாடு­ப­டு­வது என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது என்றும் தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com