சற்று முன்
Home / செய்திகள் / 457 தொண்டராசிரியர்களில் 142பேர் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள்

457 தொண்டராசிரியர்களில் 142பேர் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள்

வடக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 457 தொண்டராசிரியர்களில் 142பேர் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண தொண்டராசிரியர்களிகான நிரந்நர நியமனம் கடந்த 2018-07-22 அன்று யாழ் இந்துக் கல்லூரியல் வைத்து பிரதமரால் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட 457 பேரில் 142பேர் கிளிநொச்சி கல்வி வலயத்தினையும் , 59 பேர் முல்லைத்தீவு வலயத்தினையும், 49 பேர் வவுனியா தெற்கு வலயத்திலும் நியமனம் பெற்றுள்ளனர். இதேபோன்று தீவகத்தைச் சேர்ந்த 40பேரும் , வலிகாமத்தைச் சேர்ந்த 39 பேரும் நியமனம் பெற்றுள்ளனர்.

இதேபோன்று வடமராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 34பேரும் , யாழ்ப்பாணம் கல்வி வலயத்தைச் சேர்ந்த 29 பேரும் , வவுனியா வடக்கைச் சேர்ந்த 16 பேரும் , மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த 14 பேரிற்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு தென்மராட்சி கல்வி வலயத்தில் 10 பேரிற்கும் மடுக் கல்வி வலயத்தில் 4 பேரிற்குமாகவே மொத்தம் 457 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள அதே நேரம் கடந்த 2018-03-28 அன்றும் 182 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com