சற்று முன்
Home / செய்திகள் / 26 ஆம் திகதி நிகழ்வை தடைசெய்ய வேண்டாம் – முதலமைச்சரின் செயலாளர் கோரிக்கை

26 ஆம் திகதி நிகழ்வை தடைசெய்ய வேண்டாம் – முதலமைச்சரின் செயலாளர் கோரிக்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் 26ம் திகதி இடம்பெறத் திட்டமிட்ட சமாதான மற்றும் மத்திய சுற்றுலா அதிகார சபைகளின் நிகழ்வினை தடையின்றி நடாத்த அனுமதிக்குமாறு மாநகர முதல்வரிற்கு வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் திருமதி.விஜயலக்சுமி – கேதீஸ்வரன் மீண்டும் கோரியுள்ளார்.

மத்திய சுற்றுலா அதிகார சபையினால் இதுவரை காலமும் கொழும்பில் மட்டுமே மேற்கொண்ட ஓர் நிகழ்வினை முதல் தடவையாக கொழும்பிற்கு வெளியே அதாவது வடக்கு மாகாணத்தில் நடாத்த திட்டமிடப்பட்டு அதற்கான முன் ஆயத்தக் கலந்துரையாடல்களும் கடந்ந 8ம் மாதம் 28ம் திகதி இடம்பெற்றவேளையில் மாநகர சபையின் சார்பில் பிரதி மேஜர் , ஆணையாளர் , பொறியியலாளர் உள்ளிட்டோரும் பங்கு கொண்டிருந்தனர். இதன்போது எந்த மறுப்பும் மாநகர சபையினால் தெரிவிக்கப்படவில்லை.

இதன் அடிப்படையில் சகல ஏற்பாடுகளும் மேற்கொண்டு நிறைவுற்ற நிலையில் கொழும்பில் இருந்து மட்டுமன்றி சகல மாகாண சுற்றுலா அதிகாரிகளும் சமூகமளிக்கும் நிலையில் கடந்த சனிக்கிழமை தங்களின் அறிவிப்பான மாநகரை சபை மைதானத்தை 26ம் திகதி வழங்க முடியாது என்பது பல நெருக்கடிகளை தோற்றுவிக்கின்றது.

எனவே குறித்த முடிவினை மாற்றி மீள் பரிசீலனை செய்து அந்த ஆரம்ப நிகழ்வை 26ம் திகதி திட்டமிட்ட வகையில் நடாத்த அனுமதிக்குமாறு கோருகின்றேன். என எழுத்தில் கோரியுள்ளார் .

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com