சற்று முன்
Home / Uncategorized / 2015 அதிர்ச்சி தந்த மரணங்கள் சில

2015 அதிர்ச்சி தந்த மரணங்கள் சில

01. மாணவன் செந்தூரன்

 கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த, யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான இ.செந்தூரன் (வயது18) பாடசாலை கொப்பியில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மரண சாசனம் எழுதிவிட்டு, புகைவண்டி முன் பாய்ந்து 26.11.2015 அன்று உயிரை மாய்த்தான்
குறித்த சம்பவம் யாழ்.கோண்டாவில் புகைவண்டி தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்றிருந்தது. குறித்த மாணவன் தனது பாடசாலை கொப்பியில் தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் வைத்திருப்பது தனக்கு மனவேதனையைக் கொடுப்பதாவும்,

அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை கேட்டு கடிதம் எழுதிவைத்துள்ளதுடன், கடிதத்தில் கீழ் பகுதியில் தமிழீழம் என எழுதி கையொப்பமிட்டுள்ளதுடன், கீழே தனது சுய விபரங்களை எழுதி வைத்துவிட்டு சாவினைத் தழுவியுள்ளான்.

 02. மாணவி வித்தியா

புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனையடுத்து வெகுண்டெழுந்த மக்கள் மாணவின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதோடு கர்த்தாலையும் அனுசரித்தனர். இச் சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  

03. விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை முன்னாள் பொறுப்பாளர் தமிழினி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை முன்னாள் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியம் 18.10.2015 அன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 43வயதாகும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று அவர் மரணமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போரின் பின்னர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினி பின்னர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டார்.

தமிழினி 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.

04. அப்துல் கலாம்
இளைஞர்களின் இதய நாயகன் கலாம் நம்மை விட்டுச் சென்ற வருடம் 2015. முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம்,  “மக்களின் குடியரசு தலைவர்” எனவும் “ஏவுகணை நாயகன்” எனவும் அன்போடு அறியப்பட்டவர். தன் மனதுக்கு பிடித்தமான வேலையை செய்து கொண்டிருந்தபோதே இவர் உயிர் பிரிந்தது. ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மாணவர்களோடு உரையாடி கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்தார். இளைஞர்களை “கனவு காணுங்கள்” என்று அழைத்த கலாமின் மறைவு,  நாட்டிற்கு ஒரு பேரிழப்பே. கனவு நாயகன் நம்மை விட்டு நீங்கிய தினம் ஜூலை 27, 2015.

05. ஜெயகாந்தன்
தமிழ் இலக்கிய உலகின் பிதாமகனான ஜெயகாந்தன்,  தனது 81 வது வயதில் காலமானார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற பெருமைக்குரியவர். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட ஜெயகாந்தனின் மறைவு பெரும் இழப்பு. பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இவர் மண்ணுலகை விட்டு நீங்கிய தினம் ஏப்ரல் 8, 2015.

06. “ஆச்சி” மனோரமா
‘ஆச்சி’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா,  தன் 78 வது வயதில் காலமானார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள  மனோரமாவின் கலைப் பயணம் சுவாரஸ்யமானது. தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர் இவர். பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளுடன் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான இந்திய தேசிய விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார். துயரத்தில் தன் ரசிகர்களை தவிக்கவிட்டுவிட்டு  இவர் மறைந்த தினம் அக்டோபர் 10, 2015.

07. எம்.எஸ். விஸ்வநாதன்
பல ஆண்டுகளாக இசை மழையில் ரசிகர்களை  தாலாட்டிய மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன் 87-வது வயதில், 14-ம் தேதி ஜூலை மாதம் நம்மை விட்டு சென்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள எம். எஸ். வி,  தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராடும் கடலுடுத்த…’ பாடலுக்கு இசையமைத்த பெருமை வாய்ந்தவர்.
08. ஊடகவியலாளர் கதிரவேலு

மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கலாபூசணம் ச.கதிரவேலு ஐயா தனது 84 ஆவது வயதில் 19.11.2015 அன்று காலமானார். தமிழராட்சி மாநாட்டு படுகொலை , மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல நெருக்கடி சமயங்களில் புகைப்பட ஊடகவியளாலரால் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டவர்.

பொலிசாரின் தாக்குதலால் தனது ஒற்றைக்கண்ணின் பார்வையையும் இழந்தவர்.ஒற்றைக்கண் பார்வை இழந்த பின்னரும் ஊடகத்துறையை விட்டு விலகாது இறுதி நாள் வரை பணியாற்றியவர்.

ஊடக நிறுவனம் ஒன்றில் தனது ஊதியத்தை பெற வந்த வேளையில் கிணற்றினுல் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.ஊடகத்துறையினருக்கு ஓர் முன்னோடி கதிரவேற்பிள்ளை ஐயா ஊடகத்துறையில் ஆறிறிய பங்களிப்புக்காக 2012 ஆம் ஆண்டு கலாபூசணம் விருதி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.ஊடக அமையத்தால் சிறந்த ஊடக சேவைக்காக கதிரவேலு ஐயா கௌரவிக்கப்பட்டார்.

யாழ்.ஊடக அமையத்தில் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தவரும் அவரே.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com