சற்று முன்
Home / செய்திகள் / 18 வருடங்களின் முன் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர் அனுதாரபுரம் சிறையில்

18 வருடங்களின் முன் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர் அனுதாரபுரம் சிறையில்

1997 ஆம் ஆண்டு படையினரால் கைது செய்யப்பட்ட தனது அண்ணனை 18 வருடங்களின் பின் 2015 இல் அனுராதபுரம் சிறைச்சாலையில் கண்டதாக அங்கிருந்து வந்தவர்கள் தெரிவித்துள்ளதாக படையினரால் கைது செய்யப்ட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் சகோதரி காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்த ஒரு வாரக காலமாக யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் இன்றயை தினம் (16)   தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும் போதே ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
கடந்த சில மாதங்களிற்கு முன் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலை கொண்டு செல்லப்பட்டவர்களே காணாமல் போன எனது தம்பியை கண்டதாக தன்னிடம் தெரிவித்தாக சகோதரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

மானிப்பாய் பகுதியில் சைக்கிள் கடை நடாத்திவந்த தனது தம்பியான இராசையா சசிந்தன் 1997ம் ஆண்டு 02ம் மாதம் 6ம் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்ததாகவும் அதன் பின்னர் அவர் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர்
கடந்த 5ம் மாதம் புங்குடுதீவு மாணவியின் கொலை சம்பவத்தை அடுத்து யாழில் ஏற்பட்ட வன்முறையில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து தமது பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களை அனுராதபுர வைத்திய சாலைக்கு  அழைத்து செல்லப்படும் போது தனது அண்ணாவையும் அவர்களுடன் அழைத்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளை அவர்களுடன் கதைத்த தனது தமையன் தன்னை பற்றியும் எம்மை பற்றியும் அவர்களிடம் கூறி தான் அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறேன் என்ற தகவலை தங்களுக்கு தெரியப்படுத்து மாறு கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனை அடுத்து அவர்கள் இருவரும் விடுதலையாகி வந்து தனக்கு அந்த தகவலினை தெரியப்படுத்தினார். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com